கோவை ஆர்.எஸ் புரம் பகுதியில் உள்ள ஈரநெஞ்சம் அறக்கட்டளை முதியோர் இல்லத்தில், முதியோர்கள் தை பொங்கலை பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைக்கும் அடுப்பை, தயார் செய்து அடுப்பை சுற்றி கோலமிட்டு பொங்கல் வைத்து வழிபட்டனர்.
கோவை: தமிழர்களின் பண்டிகையான பொங்கல் விழாவை தமிழ் மக்கள் இவ்வாண்டு கொரோனா கட்டுபாடுகளுடன் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், கோவை ஆர்.எஸ் புரம் பகுதியில் உள்ள ஈரநெஞ்சம் அறக்கட்டளை முதியோர் இல்லத்தில், முதியோர்கள் தை பொங்கலை பாரம்பரிய முறைப்படி கொண்டாடி மகிழந்தனர்.

அங்குள்ள முதியவர்களே பொங்கல் வைக்கும் அடுப்பை, தயார் செய்து அடுப்பை சுற்றி கோலமிட்டு அழகுபடுத்தினர். மாவிலை, மஞ்சள் செடி கட்டி அலங்கரித்த பொங்கல் பானையை முதியோர்கள் ஒன்றிணைந்து அடுப்பில் பொங்கல் வைத்து படையலிட்டு கதிரவனுக்கு படைத்தனர்.
அதே போன்று, கோவை மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் மக்கள் கொரோனா நோய்த்தொற்று விதிமுறைகளை பின்பற்றி எளிமையான முறையில் பொங்கல் விழாவை கொண்டாடினர். இந்த ஆண்டு கோவில்களில் வழிபாடு செய்ய பொதுமக்களுக்கு அனுமதி இல்லாததால், கோவில்கள் வெறிச்சோடி காணப்பட்டது.