கோவை கீரணத்தம் பகுதியைச் சேர்ந்தவரின் இருசக்கர வாகனத்தை மர்ம நபர் ஒருவர் திருடிச்செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
கோவை: கோவை கீரணத்தம் பகுதியைச் சேர்ந்த முருகையா என்பரது இருசக்கர வாகனத்தை மர்ம நபர் ஒருவர் திருடிச்செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
கோவை கீரணத்தம் பகுதியைச் சேர்ந்த முருகையா என்பவரது இரு சக்கர வாகனத்தை வீட்டில் நிறுத்தியிருந்த நிலையில், கடந்த 11-ஆம் தேதி மர்ம நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தைத் திருடிச் செல்லும் காட்சி வெளியாகியுள்ளது.
வாகனத்தைத் தள்ளிவிட்டுச் சென்று பிரதான சாலைக்குச் சென்ற பிறகு அந்த நபர் வாகனத்தை ஓட்டி செல்லும் காட்சிகள் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக கோவில்பாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என பாதிக்கப்பட்டவர் தெரிவிக்கிறார்.