முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகழேந்தி புகார் மனு

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் அலுவலகத்தில் அதிமுகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் புகழேந்தி புகார் மனு அளித்தார்.



கோவை: அதிமுகவின் முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகரிடம் புகார் மனு அளித்தார்.

அம்மனுவில் கூறியுள்ளதாவது:-

"கோவை தொண்டாமுத்தூரில் கடந்த 2021-ம் ஆண்டு நடந்த பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் குறித்தும், முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்தும், அவர்கள் குடும்பம் குறித்தும் தனிப்பட்ட முறையில் தரக்குறைவாக ராஜேந்திர பாலாஜி பேசியிருந்தார்.

தொண்டாமுத்தூர் பகுதிக்கு மு.க.ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு வரும் பொழுது அவர் மீது தாக்குதல் நடத்தத் தூண்டும் விதத்தில் பாலாஜி பேசியிருந்தார். முன்னாள் மத்திய அமைச்சர் ராசா குறித்தும் தவறான வார்த்தைகளில் பேசியதுடன், இரு மதங்களிடையே மோதலை ஏற்படுத்தும் விதமாகவும் ராஜேந்திர பாலாஜி பேசியிருந்தார் என குறிப்பிடப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், 'மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலஹாசன் உட்பட பல்வேறு அரசியல் கட்சியினரை தரக்குறைவாக, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசி இருக்கிறார்.

இது தேர்தல் நடத்தை விதி முறைகளுக்கு எதிரானது. எனவே அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். ராஜேந்திர பாலாஜிக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதில் அரசு தரப்பு வழக்கறிஞர் ராஜேந்திர பாலாஜி குறித்தான சரியான ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யாதது தான் ஜாமீன் கிடைக்கக் காரணம்.

கடந்த ஆட்சியில் காவல்துறை அவர்கள் பக்கம் இருந்ததால் நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனப் புகார் அளித்துள்ளேன். என் புகாரைப் பெற்றுக்கொண்ட ஐஜி காவல்துறை இயக்குனர் அலுவலகத்திலும் புகாரைப் பதிவு செய்யுமாறு அறிவித்துள்ளார் என தெரிவித்தார்.

Newsletter

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...