கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களுக்கு நிதி உதவி வழங்க வேண்டும்: அமைப்பு சாரா தொழிலாளர் நல சங்கம் கோரிக்கை

கொரோனா பாதிப்பால் உயிரிழக்கும் கட்டுமானம் மற்றும் ஆட்டோ தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு மூன்று லட்ச ரூபாய் நிதி உதவி வழங்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு கோவை, திருப்பூர் மாவட்ட அமைப்பு சாரா தொழிலாளர் நல சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.



கோவை: கொரோனா பாதிப்பால் உயிரிழக்கும் கட்டுமானம் மற்றும் ஆட்டோ தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு மூன்று லட்ச ரூபாய் நிதி உதவி வழங்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு கோவை, திருப்பூர் மாவட்ட அமைப்பு சாரா தொழிலாளர் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனா பாதிப்பால் உயிரிழக்கும் கட்டுமானம் மற்றும் ஆட்டோ தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு மூன்று லட்ச ரூபாய் நிதி உதவி வழங்க வேண்டும் என்றும், அரசு அதிகாரிகள் அலட்சியம் காரணமாக பத்தாண்டுகளுக்கு மேலாக நலவாரிய பயன்களைப் பெற முடியாமல் தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் தவிப்பதாகவும் அமைப்புசாரா நல சங்கம் தெரிவித்துள்ளது.

கோவை, திருப்பூர் மாவட்ட அண்ணா கட்டுமான மற்றும் அமைப்புச்சாரத் தொழிலாளர் முன்னேற்றச் சங்க நிர்வாகிகள் G.முருகேசன், வெ.கிருஷ்னசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழர் திருநாளாம் தைத்திருநாளில் கட்டுமானத்தொழில் சிறக்கும் வண்ணம் கடந்த கொள்ளையர்களின் ஆட்சியில் 5 ஆண்டுகளாக வரலாறு காணாத வகையில் உயர்ந்து கண்ணில் பார்க்க முடியாத நிலையிலிருந்த மணல் விலையை யூனிட் ₹ 1,000 மாக நிர்ணயம் செய்தும் வாரியத்தில் பதிவு செய்த கட்டுமானம் தொழிலாளர்களுக்கு வீடுகட்ட இலவசமாக ₹ 4 லட்சம் வரை நிதியுதவி என்றும் கட்டுமானத்துறையிலிருந்த கட்டிட வரைபட அனுமதியை எளிமையாக்கி கால அவகாசம் 5 ஆண்டு என்பதை 8 ஆண்டுகளாக அரசாணைகளை வெளியிட்டு கட்டுமான, தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பொங்கல் பரிசாக வழங்கியும் வாழ்வுரிமை போக்கும் விதமாகவும் புரட்சி ஏற்படுத்திய தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களுக்குக் கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர் சங்கத்தின் சார்பாகக் கோடான கோடி நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். 

தமிழக முதல்வர் அவர்களுக்குத் தமிழகத்தில் வாழ்கின்ற 2 கோடிக்கு மேலான கட்டுமான அமைப்புச்சாரத் தொழிலாளர்களின் வாழ்வுரிமையையும் வாழ்வாதாரத் தையும் காப்பாற்றத் தொழிற்சங்கத்தின் சார்பில் ஒரு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த 1995லிருந்து 2021 வரை 27 ஆண்டுகளாகத் தமிழகத்தில் எத்தனையோ முதல்வர்களைக் கண்டுள்ளோம். ஆனால் கட்டுமான அமைப்புச்சாரத் தொழிலாளர்களின் நலனில் அக்கறை கொண்டு செயல்படும் விதமாக 200 நாட்களில் ஓரு லட்சம் தொழிலாளர்களுக்கு மேல் நலத்திட்ட உதவிகளை மிக கடுமையான பணிச்சுமைக்கு மத்தியிலும் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவில் 200% நலத்திட்ட உதவிகளை உயர்த்தி வழங்கி முல்லைக்குத் தேர் கொடுத்தான் பாரி வள்ளலை போல எங்களின் தொழிலாளர்களின் வாழ்வுரிமை மற்றும் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திடும் வகையில் அக்கரைக் கொண்டு பன்முகத்தன்மையோடு நடந்து கொள்ளும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகளைத் தொழிலாளர்கள் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழக முதல்வர் அவர்களுக்கு தொழிலாளர் நலன் சார்ந்து ஒரு வேண்டுகோள்:

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நலத்திட்டத்திற்காக 60 வயது பூர்த்தியாகி ஒய்வூதியம், குடும்ப ஒய்வூதியம், இயற்கை மரணம், விபத்துமரணம், விபத்தில் ஊனமுற்றோர் அல்லது இயற்கை உபதையால் ஊனமுற்றோர் ஒய்வூதியம் உள்ளிட்டவற்றைப் பெறமுடியாமல் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்களது வாழ்வுரிமையை இழந்து தவித்து வருகின்றனர்.

இவ்வாறு தவிக்கின்ற தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் கட்டுமானம் ஆட்டோ நலவாரியத்தில் போதுமான அளவு நிதி உள்ளது. எனவே 1982 சட்டத்தின்படி 1994 திட்டப்படி தொழிலாளி போராடிப் பெற்ற உரிமையை காலதாமதமின்றி தொழிலாளர்களுக்கு நலவாரியத்தின் மூலம் பலன்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.

கட்டுமானம் வாரியத்தில் சுமார் Rs.4,250 கோடி. ஆட்டோ நல வாரியத்தில் சுமார் Rs.850 கோடி என அதிகளவு நிதியும் . வருவாயும் இருப்பதைப் போல் அமைப்புச்சாரத் தொழிலாளர்களுக்கும் நிதி ஆதாரத்தை உருவாக்கி நிரந்தரமாக அவர்களும் தங்குதடையின்றி வாழ்வுரிமையை பெற்றிட நடவடிக்கை மேற்கொள்ளத் தொழிலாளர்களின் சார்பில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களைக் மீண்டும் ஒருமுறைக் கேட்டுக் கொள்கிறோம்.

நல வாரியத்தின் மூலம் பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பலனடைந்து வந்த போதிலும் இந்த திட்டத்தில் பயனடைந்தவர்களை விட புதுப்பிக்கப்படவில்லை என்ற காரணத்தை காட்டி நலத்திட்ட உதவிகளையும் வாரிய பதிவையும் இழந்தவர்களே மிக அதிகம்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக உறுப்பினர்கள் தங்களது பதிவை புதுப்பிக்கவும் திட்டங்களை பெற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் எந்த பலனும் இல்லை இதனால் மனதளவிலும் உடலளவிலும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எந்த நோக்கத்திற்காக மறைந்த தலைவர்களான முத்தமிழறிஞர் கலைஞர், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி ஜெ.ஜெயலலிதா உள்ளிட்டோர் தொழிலாளர் நலத்துறை மூலமாக தொழிலாளர் நலவாரியத்தையும் நிதியாதரத்தையும் உருவாக்கினார்களோ அந்த நோக்கமே தற்பொழுது வீணாகி உள்ளது.

தமிழக முதலமைச்சராக தாங்கள் பொறுப்பேற்ற பின் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி பணியாற்றி வரும் போதிலும் தொழிலாளர் நலத் துறை அதிகாரிகளின் அலட்சியப்போக்கு காரணமாக அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியத்தில் எந்த பயனையும் பெற முடியாத அவல நிலையில் தவித்துக் கொண்டு உள்ளனர்.

கடந்த 27 ஆண்டுகளாகப் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு எக்காரணத்தைக் கொண்டும் தொழிலாளர்களின் உரிமையான ஓய்வு ஊதியம், மரணத்திற்கு நீதி உதவி என்பது உள்ளிட்ட நலவாரியத்தின் பலன்கள் கிடைக்கும் என காத்திருந்த அமைப்புசாரா தொழிலாளர்கள் ஏமாற்றமடைவது மிகவும் கவலையில் உள்ளனர்.

இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் விரைவில் அரசாணை வெளியிட வேண்டும். கடந்த 4.09.2021 சட்டசபையில் வெளியிட்ட நலதிட்ட அறிவிப்பின்படி அதேநாளில் அரசாணையில் தேதி குறிப்பிட்டு வெளியிட வேண்டும்.

கட்டுமானத் தொழிலாளர்களுக்குக் குறைந்த பட்சம் 5,000 ரூபாய் மழைக்கால நிவாரண நிதியும், கொரானா காலத்தில் உயிரிழந்த கட்டுமான, ஆட்டோ தொழிலாளர்களுக்கு மரணநிதியாக 3 லட்ச ரூபாயும் வழங்க வேண்டும். இதுவே அமைப்புசாரா தொழிலாளர்கள் அனைவரின் எதிர்பார்ப்பாகும்." இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...