தமிழகத்தில் பொங்கல் பண்டிகை நாளை விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. இந்தநிலையில், கோவை மாவட்டம் கிணத்துக்கடவு சொலவம்பாளையம் ஊராட்சி சார்பில் இன்று சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டது.
கோவை: தமிழகத்தில் பொங்கல் பண்டிகை நாளை விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. இந்தநிலையில், கோவை மாவட்டம் கிணத்துக்கடவு சொலவம்பாளையம் ஊராட்சி சார்பில் இன்று சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டது.

ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார் தலைமையில், நடைபெற்ற இந்த சமத்துவ பொங்கல் விழாவில் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு புதுப்பானையில் பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர்.

பின்னர் ஊராட்சி பணியாளர்களுக்கு பொங்கல் வைப்பதற்கு தேவையான பச்சரிசி, வெல்லம் உள்ளிட்ட பொருட்களும் ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டது.
இந்த விழாவில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ராஜன், துணைத்தலைவர் ராதாகிருஷ்ணன், வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.