கோவையில் நகை அக்மார்க் நிறுவனங்களில் தர நிர்ணய அதிகாரிகள் அதிரடி ரெய்டு,..! 11 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் போலி முத்திரைகள் பறிமுதல்.

கோவை செட்டிவீதி மற்றும் பெரியகடை வீதியில் அமைந்துள்ள இரு நிறுவனங்களில் காலாவதியான உரிமம் மற்றும் முந்தைய முறைப்படி ஹால் மார்க் முத்திரை தங்க நகைகளில் சட்டவிரோதமாக பதிவிடப்பட்டது தெரியவந்துள்ளது.


Coimbatore: கோவை: பொங்கல் பண்டிகை மற்றும் வரும் மாதங்கள் திருமணம் செய்ய ஏற்புடைய சுபமுகூர்த்த மாதங்கள் என்பதால், மக்கள் புதிய நகைகள் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் பொருட்டு, பல்வேறு நகை கடைகளில் கூலி, சேதாரத்தில் தள்ளுபடி என வாடிக்கையாளர்களை ஈர்க்க பல்வேறு விளம்பரங்களை செய்து வருகின்றனர்.

நகை கடைகளில் தள்ளுபடி நியாயமான முறையில் தரப்பாட்டலும், பண்டிகை காலத்தினை பயன்படுத்தி போலி நகைகள் சந்தையில் விற்கப்படுகின்றனவா?என்ற அடிப்படையில்,இந்திய தர நிர்ணய அமைவன தலைமை அதிகாரி மீனாட்சி, தலைமையில் கோவை செட்டி வீதி, பெரிய கடை வீதிகளில் திடீர் சோதனை நடத்தப்பட்டது.



916 , 22 கேரட் தங்க நகைக்கான தர சான்று முத்திரையிடும் தொழில் கூடங்கள் அதிகம் அமைந்திருக்கின்ற செட்டி வீதி, பெரிய கடை பகுதியில்,"ரேவதி" மற்றும் "ஸ்ரீ " என்ற இரண்டு ஹால் மார்க் முத்திரையிடும் தொழில் கூடங்களில் தர நிர்ணய அமைவன அதிகாரிகள் இரண்டு குழுக்களாக, பத்து பேர் இரண்டு கடைகளிலும் சோதனை நடத்தினர்.

அப்போது, காலாவதியான உரிமம் மற்றும் முந்தைய முறைப்படி அந்த தொழில் கூடங்களில் ஹால் மார்க் முத்திரை தங்க நகைகளில் சட்டவிரோதமாக பதிவிடப்பட்டதுதெரியவந்துள்ளது.

லேசர் எந்திரத்தில், தங்க நகைகளுக்கான தர சான்ற,

ஹால்மார்க் முத்திரைகளை சட்ட விரோதமாக பயன்படுத்திக் கொண்டிருந்த போது, அதிகாரிகள் அதனை தடுத்து நகைகளை மற்றும் போலியான ஹால்மார்க் முத்திரையை பறிமுதல் செய்து தர நிர்ணய அமைவன அலுவலகத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.



சட்ட விரோதமாக செயல்பட்ட கடைகளின் உரிமம்

காலாவதியாகி இருக்கின்றன. ஒரு கடை மூடப்பட்டு இருந்த நிலையில் அந்த கடையின் ஊழியர்கள் கடையின் பெயரை பயன்படுத்தி நகைக்கான தர முத்திரைகளை போலியாக பயன்படுத்தியுள்ளனர் என்று தெரிவித்த அதிகாரிகள், அங்கிருந்து 11 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள் பறிமுதல் செய்து, கடையின் உரிமையாளர் ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.



பொங்கல் பண்டிகை காலங்களில் பொதுமக்களின் நகை வாங்கும் ஆர்வத்தினை பயன்படுத்திக் கொண்டு, இதுபோல போலி நகைகள் விறக்கப்படுவதாகவும், இதனை தடுத்து நிறுத்த சோதனை நடத்தப்பட்டதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், இவ்வாறு சட்ட விரோதமாக விற்கப்படும் நகைகள் செல்லாது என்றும் தங்க நகைகளில் அச்சிடப்பட்டுள்ள ஹால்மார்க் எண்ணை இணையத்தின் அல்லது செயலி மூலமாக, வாடிக்கையாளர்கள் உறுதி செய்து கொள்ளலாம், என்று அறிவுறுத்தினர்.

Newsletter

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...