ஜி.என்.மில்ஸ் அருகே குண்டும் குழியுமான சாலையால் தொடர் விபத்து

ஜி.என்.மில்ஸ் அருகே குண்டும் குழியுமான சாலையில் தடுமாறிய மாற்றுத்திறனாளிக்கு பொதுமக்கள் உதவி செய்தனர். தொடர் விபத்து குறித்து மாவட்ட நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோயமுத்தூர் மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை ஜி.என்.மில்ஸ் அருகே குண்டும் குழியுமான சாலையில் தடுமாறிய மாற்றுத்திறனாளிக்கு பொதுமக்கள் உதவி செய்தனர்.

கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலை ஜி.என்.மில்ஸ் அருகே மேம்பாலம் கட்டும் பணி கிட்டத்தட்ட 3 வருடங்களாக நடைபெற்று வருகிறது. மேம்பாலம் வேலை முடியுமா, முடியாதா என்ற தெரியாமல் வாகன ஓட்டிகள் அந்த வழியாகச் சென்று வருகின்றனர்.

இந்த நிலையில், தேசிய நெடுஞ்சாலைத்துறை சாலை வழியாக ஜி.என்.மில்ஸ் பேருந்து நிறுத்தம் அருகே அத்திக்கடவு குடிநீர் குழாய் செல்கிறது. இந்த குடிநீர் குழாய் பல மாதங்களுக்கு முன்பு உடைந்துள்ளது. இந்த காரணமாகப் பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகி வருகிறது.

இதுகுறித்து கோயமுத்தூர் மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தினர் கூறும்போது, இந்த சாலையில் வாகனம் ஓட்டும்போது இதய நோய் உள்ளிட்ட பல நோய்கள் வர வாய்ப்புள்ளது. மேலும், வாகனங்களும் பழுதடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

குடிநீர் குழாய் உடைத்த இடத்தில் உள்ள சாலையில் பல இடங்களில் கிணறுபோல பள்ளம் ஏற்பட்டுள்ளது. நாங்கள் பலமுறை போட்டோ மற்றும் வீடியோ ஆதாரத்துடன் வாட்ஸ் அப்-ல் தெரிவித்துள்ளோம்.

இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரியத்தினரோ, தேசிய நெடுஞ்சாலைத்துறையினரோ, மாவட்ட நிர்வாகத்தினரோ யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் வேதனையுடன் தெரிவித்தனர்.

இந்த நிலையில் கோவையிலிருந்து வந்த மாற்றுத்திறனாளி ஒருவர் ஜி.என்.மில்ஸ் அருகே ஏற்பட்ட திடீர் கிணற்றில் தனது வண்டியுடன் சிக்கிக்கொண்டார். அதனைப் பார்த்த பொதுமக்கள் அவரை பத்திரமாக மீட்டனர்.

அதற்குள் பின்னால் சுமார் ஒரு கிலோமீட்டருக்கு வாகனங்கள் நெரிசலில் சிக்கின. அதேபோல முதியவர் ஒருவர் தனது காரை ஓட்டிவந்தபோது அவரால் சாலையில் ஏற்பட்ட திடீர் கிணற்று அருகே காரை ஓட்டமுடியாமல் நின்றுவிட்டார்.

தொடர்ந்து பொதுமக்கள் ஒருவர் காரை அந்த இடத்திலிருந்து ஓட்டி தந்தார். இதேபோல தினமும் இந்த திடீர் கிணறு அருகே டூவிலர் மற்றும் கார்களில் வரும் வாகன ஓட்டிகள் சிக்கி தவிக்கின்றனர்.

தினமும் விபத்துகள் ஏற்படுகின்றன. இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோயமுத்தூர் மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...