28-சதவீதமாக இருந்த கட்டிட அனுமதி தற்போது 82.93-சதவீதமாக உயர்வு: கோவை மாநகராட்சி ஆணையாளர் தகவல்

மாநகராட்சி நிர்வாகத்தின்‌ தொடர்‌ கண்காணிப்பாலும்‌, தொடர்‌ நடவடிக்கையினாலும்‌ 28-சதவீதமாக இருந்த கட்டிட அனுமதி தற்போது 82.93-சதவீதமாக உயர்ந்து விரைவாகக் கோப்புகளுக்கு உரிமம்‌ வழங்கப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையாளர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா தெரிவித்துள்ளார்.


கோவை: கோயம்புத்தூர்‌ மாநகராட்சி நிர்வாகத்தின்‌ தொடர்‌ கண்காணிப்பாலும்‌, தொடர்‌ நடவடிக்கையினாலும்‌ 28-சதவீதமாக இருந்த கட்டிட அனுமதி தற்போது 82.93-சதவீதமாக உயர்ந்து விரைவாகக் கோப்புகளுக்கு உரிமம்‌ வழங்கப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையாளர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூர்‌ பி.எஸ்‌.ஜி.தொழிநுட்பக்‌ கல்லூரி கூட்டரங்கில்‌ மாநகராட்சியில்‌ விரைவாகக் கட்டிட அனுமதி வழங்குவதற்கு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்ட UTIS Smart DCR இணையதளத்தில்‌ பதிவேற்றம்‌ செய்வதில்‌ உள்ள இடையூறுகளைச் சரிசெய்வது குறித்து மாநகராட்சியில்‌ பதிவு செய்த 62 பொறியாளர்களுக்கு (Registered Engineers) சென்னை Vinzas Solutions India Private Limited‌ நிறுவனத்தின்‌ தொழில்‌ நுட்ப பயிற்சியாளர்‌ ரங்கசாமி நேரடி விளக்கமும்‌ கணினி வாயிலாகச் சந்தேகங்களை நிவர்த்தி செய்து குறித்தும்‌ பயிற்சி அளித்தார்‌.

முன்னதாக, நகராட்சி நிர்வாக இயக்குநரகம்‌, சென்னை அலுவலகத்தின்‌ கீழ்‌ செயல்பட்டுவரும்‌ UTIS மென்பொருள்‌ மூலமான கட்டிட அனுமதி வழங்குவது குறித்து ஆணையாளர்‌ தலைமையில்‌ சென்னை மென்பொருள்‌ பராமரிப்பு நிறுவனம்‌ மற்றும்‌ மாநகராட்சியின்‌ பதிவுபெற்ற பொறியாளர்கள்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ காணொளி காட்சி (Video Conference) மூலமாக முதற்கட்ட கலந்தாய்வு நடத்தப்பட்டது.



அதனடிப்படையில்‌, கோயம்புத்தூர்‌ மாநகராட்சி நகரமைப்பு பிரிவு அலுவலர்கள்‌ அனைவரையும்‌ ஆணையாளர்‌ மற்றும்‌ துணை ஆணையாளர்‌

ஆகியோர்‌ முன்னிலையில்‌ கோப்புகள்‌ ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு 120 கோப்புகளுக்குக் கட்டிட உரிமம்‌ வழங்கப்பட்டுள்ளது.

நகரமைப்பு பிரிவில்‌ மொத்த 2194 கோப்புகள்‌ நிலுவையிலிருந்தது. அதில்‌ சம்பந்தப்பட்டவ்கள்‌ பணம்‌ செலுத்தி ஒப்புதலுக்கான வந்த கோப்புகள்‌ 826, கட்டட உரிமத்திற்கு அனுமதி அளிக்கப்பட்ட கோப்புகள்‌ - 685, கட்டட அனுமதிக்குச் சம்பந்தப்பட்டவர்‌ பணம்‌ செலுத்தப்படாத கோப்புகள்‌ - 56 மற்றும்‌ நிலுவையிலுள்ள கோப்புகள்‌ -627, தற்போது 141 கோப்புகள்‌ பரிசீலனையில்‌ உள்ளது. 01.11.2021 அன்று கட்டட அனுமதி 28% கோப்புகளுக்கு அளிக்கப்பட்டது.

மாநகராட்சி நிர்வாகத்தின்‌ தொடர்‌ கண்காணிப்பாலும்‌, தொடர்‌ நடவடிக்கையினாலும்‌ 28% ஆக இருந்த கட்டிட அனுமதி தற்போது 82.93% ஆக உயர்ந்து விரைவாகக் கோப்புகளுக்கு உரிமம்‌ வழங்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள கோப்புகளில்‌ தகுதியுடைய கோப்புகளை விரைவில்‌ தீர்வுகாண வேண்டும்‌. கூடுதல்‌ ஆவணங்கள்‌ தேவைப்படுமெனில்‌ சம்பந்தப்பட்டவர்கள்‌ இணையதளம்‌ வாயிலாகப் பதிவேற்றம்‌ செய்ய அறிவுறுத்த வேண்டுமெனவும்‌ பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்கள்‌.

இனிவரும்‌ காலங்களில்‌ கட்டிட அனுமதி வேண்டி விண்ணப்பித்தவர்கள்‌ உரிய நகலுடன்‌ மண்டல அலுவலகங்களுக்கு வர தேவையில்லை, இணையதளம்‌ வாயிலாக அனுமதிக்கப்பட்ட கோப்புகள்‌ விண்ணப்பித்தவர்களுக்கு அனுப்பப்படும்‌ என மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா தெரிவித்துள்ளார்‌.

இந்த பயிற்சி கூட்டத்தில்‌ மாநகராட்சி செயற்பொறியாளர்‌ (திட்டம்‌) கருப்பாத்தாள்‌. உதவி நகரமைப்பு அலுவலர்கள்‌ மற்றும்‌ உதவி செயற்பொறியாளர்கள்‌, உதவி பொறியாளர்கள்‌ மற்றும்‌ மாநகராட்சியில்‌ பதிவு செய்த பொறியாளர்கள்‌ (RE) கலந்து கொண்டனர்‌.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...