கிணத்துக்கடவு அருகே விஷம் வைத்து 9-மயில்களை கொன்ற விவசாயி

விஷம் வைத்து 9-மயில்களை கொன்ற விவசாயி தப்பியோடிய நிலையில், வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர். கால்நடை மருத்துவர்கள் இறந்த மயில்களின் உடல்களைக் கைப்பற்றி சம்பவ இடத்திலேயே பிரேதப் பரிசோதனை செய்து வருகின்றனர்.


கோவை: 9-மயில்கள் பலியான சம்பவத்தில், விவசாயி தப்பியோடிய நிலையில், வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

கோவை கிணத்துக்கடவு சிக்கலாம் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி குப்புசாமி. இவருக்குச் சொந்தமான விளை நிலத்தில் மயில்கள் அடிக்கடி உணவு தேடி வந்ததால் இன்று காலை உணவில் விஷம் கலந்து வைத்துள்ளார்.



இதை உண்ட சுமார் 9-மயில்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. இதைப் பார்த்த பொதுமக்கள் உடனடியாக வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

இதைச் சுதாரித்துக்கொண்ட குப்புசாமி அவசர அவசரமாக மயில்களைப் புதைத்துவிட்டுத் தப்பியோடி விட்டார்.



சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்கள் இறந்த மயில்களின் உடல்களைக் கைப்பற்றி சம்பவ இடத்திலேயே பிரேதப் பரிசோதனை செய்து வருகின்றனர்.

Newsletter

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...