மேட்டுப்பாளையம்- திருச்செந்தூருக்கு ரயில் இயக்க விவசாயிகள் கோரிக்கை

கோவை, நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 1-லட்சம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் மேட்டுப்பாளையத்திலிருந்து திருச்செந்தூருக்கு ரயில் இயக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: கோவை, நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 1-லட்சம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் மேட்டுப்பாளையத்திலிருந்து திருச்செந்தூருக்கு ரயில் இயக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் மிகப்பெரிய அளவில் மொத்த காய்கறி மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டிற்கு பெரியவெங்காயம், கேரட், முட்டைகோஸ், உருளைக்கிழங்கு, பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகள் உள்ளூர் விவசாயிகள் மட்டும் அல்லாமல் நீலகிரி மற்றும் கர்நாடகா மாநில விவசாயிகளிடம் இருந்தும் வருகிறது.

மேட்டுப்பாளையத்திலிருந்து கேரளா மற்றும் தமிழகத்தில் உள்ள தென்மாவட்டங்களுக்கும் காய்கறிகள் அனுப்பப்படுகின்றன. மேட்டுப்பாளையத்திலிருந்து ரயில் வசதி இல்லாததால் பல்வேறு இடங்களுக்கும் காய்கறிகள் லாரிகள் மற்றும் சொந்த வாகனங்களில் விவசாயிகள் எடுத்துச் செல்கின்றன.

இதனால் நேரச்செலவு, பணச்செலவு உள்ளிட்டவை அதிகரித்துள்ளது. மேட்டுப்பாளையத்திலிருந்து திருச்செந்தூருக்கு ரயில் இயக்கினால் கோவை, நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 1 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன்பெறுவார்கள் என விவசாயச் சங்கங்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து, தமிழக விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் கந்தசாமி கூறியதாவது:-

மேட்டுப்பாளையத்திலிருந்து சிறு, குறு விவசாயிகள் பல ஆயிரம் பேர் தென்மாவட்டங்களுக்கு மற்றும் பிற இடங்களுக்குக் காய்கறிகளை எடுத்துச் செல்வதில் சிரமம் உள்ளது. மேட்டுப்பாளையத்திலிருந்து திருச்செந்தூருக்கு ரயில் இயக்கப்பட்டால் மேட்டுப்பாளையம் விவசாயிகள் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சென்று தங்கள் காய்கறிகளைக் கொடுக்க முடியும்.

அதே போல் ஒட்டன்சத்திரத்திலிருந்து சின்னவெங்காயம் போன்றவை மேட்டுப்பாளையம் எடுத்துச் செல்ல முடியும். பெரிய விவசாயிகள், வியாபாரிகள் போன்றவர்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப வாகனங்கள் மூலம் காய்கறிகளைக் கொண்டு செல்ல முடியும்.

சிறு,குறு விவசாயிகளுக்கு ரயில் மட்டுமே குறைந்த கட்டணத்தைத் தர முடியும். விவசாயிகள் மட்டும் அல்ல விவசாயத் தொழிலாளர்களும் பணிகளுக்குச் சென்று வர முடியும். இதனால் வேலைவாய்ப்பு அதிகரிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...