கிணத்துக்கடவு பகுதியில் 17-வயது சிறுமியை திருமணம் செய்த கட்டிட தொழிலாளி போக்சோ மற்றும் குழந்தைத் திருமணம் தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை: கிணத்துக்கடவு பகுதியில் 17-வயது சிறுமியை திருமணம் செய்த கட்டிட தொழிலாளி போக்சோ மற்றும் குழந்தைத் திருமணம் தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி வயிற்று வலி காரணமாகப் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக இன்று சென்றனர். அங்கு அந்த சிறுமியைப் பரிசோதனை செய்த மருத்துவர் சிறுமி 8 மாத கர்ப்பமாக இருப்பதாகத் தெரிய வந்தது.
இதையடுத்து, கிணத்துக்கடவு காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் சிறுமியை மீட்டு விசாரணை நடத்தியதில் 21 வயதான கட்டிடத் தொழிலாளி தன்னை திருமணம் செய்து கர்ப்பமாக்கியதாக தெரிவித்தார்.
இதையடுத்து, சிறுமியைத் திருமணம் செய்து கர்ப்பமாக்கிய 21 வயதான கட்டிடத் தொழிலாளியை போலீசார் கைது செய்து அவர் மீது போக்சோ மற்றும் குழந்தை திருமணம் தடை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.