கோவையில் பொங்கல் சிறப்பு பரிசு பொதுமக்களுக்கு வழங்கியதில் தி.மு.க ரூ.400 கோடி ஊழல் - பா.ஜ.க. மாநில விவசாய அணி தலைவர் குற்றச்சாட்டு..!

தமிழகத்தில் உள்ள விவசாயிகள் வெல்லம், கோதுமை, ரவை பொருட்கள் தயாராக இருந்தும் மகாராஷ்டிரா, ஆந்திரா போன்ற பகுதிகளில் கொள்முதல் செய்து விவசாயிகளை புறக்கணித்ததாக கூறினார்.


கோவை: கோவையில் பொங்கல் சிறப்பு பரிசு பொதுமக்களுக்கு வழங்கியதில் தி.மு.க 400 கோடி ஊழல் என பா.ஜ.க. மாநில விவசாய அணித் தலைவர் பேட்டி அளித்துள்ளார்.



பொள்ளாச்சி அடுத்துள்ள கிணத்துக்கடவு பகுதியில் கோவை தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் பாரதப் பிரதமர் மோடி அவர்கள் பஞ்சாப் செல்லும்பொழுது, பஞ்சாபில் ஆளும் காங்கிரஸ் அரசு உரிய பாதுகாப்பு எடுக்காமல் அலட்சியம் செய்ததையடுத்து காங்கிரஸ் கட்சியை கண்டிக்கும் விதமாக கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

பின்னர், விவசாயிகளின் வாழ்வாதாரமான கோதவாடி குளம் பகுதியில் தமிழ்நாடு விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே. நாகராஜன் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆய்வு செய்தனர்.



பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறும் பொழுது,

பொள்ளாச்சி மாவட்டத்தில் தேங்காய் தொட்டி ரூ. 27,000க்கு விற்று வந்தது. தற்போது திமுக பொறுப்பேற்று ரூபாய் 10,000க்கு விற்கப்படுகிறது. திமுக அரசு பொறுப்பேற்ற நாள் முதல் விவசாயிகளை குறி வைத்து மிரட்டி திமுக கட்சியில் ஆட்களைச் சேர்க்கின்றனர்.

அ.தி.மு.க ஆட்சி காலத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பொங்கலுக்கு பொருட்கள் கொடுத்து, பணம் தந்து தை திருநாளை கொண்டாட வைத்தார். தற்போது முதலமைச்சர் ஸ்டாலின் பொதுமக்களுக்கு பொங்கலுக்கு கரும்பு, வெல்லம் மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்புக்கு ரூ. 1297 கோடி ஒதுக்கி, அதில் பொருட்கள் விலை ரூபாய் 600 ஆகும். இதில் ரூபாய் 400 கோடி திமுக ஊழல் செய்துள்ளது.

தமிழகத்தில் உள்ள விவசாயிகள் வெல்லம் கோதுமை ரவை பொருட்கள் தயாராக உள்ள நிலையில், மகாராஷ்டிரா, ஆந்திரா போன்ற பகுதிகளில் கொள்முதல் செய்து விவசாயிகளை புறக்கணிக்கும் செயல்களில் திமுக ஈடுபடுகின்றது எனவும் தமிழகத்தில் விடியல் ஆட்சி இல்லை விடியாத ஆட்சி என தெரிவித்தார்.

இதில் கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் வசந்தராஜன், மருதாசலம், செந்தில், பாபா ரமேஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...