கோவை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது குறித்து ஆலோசனை கூட்டம், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சமீரன் முன்னிலையில் ஜல்லிக்கட்டு கமிட்டியினர் ஆலோசனை மேற்கொண்டனர்.
கோவை: கோவை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது குறித்து ஆலோசனை கூட்டம், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சமீரன் முன்னிலையில் ஜல்லிக்கட்டு கமிட்டியினர் ஆலோசனை மேற்கொண்டனர்.
கோவை மாவட்டத்தில் 9ஆம் தேதியன்று ஜல்லிக்கட்டு போட்டி நடத்த முடிவு எடுக்கப்பட்ட நிலையில், ஊரடங்கு காரணமாக ஜல்லிக்கட்டு போட்டியானது ஒத்திவைக்கப்பட்டது. மேலும், ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை விதிகளுக்குட்பட்ட வரைமுறையை தமிழக அரசு அறிவித்துள்ளது.
அந்த வரைமுறை தமிழகம் முழுவதும் பின்பற்றப்பட உள்ள நிலையில், கோவையிலும் இதுகுறித்து விழா கமிட்டியினரிடம் எடுத்துரைக்கப்பட்டது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.