கோவையில் இருந்து கேரளாவிற்கு கனிம வளத்தை கடத்த முயன்ற 18 லாரிகள் சிறைபிடிப்பு..!

உரிமம் இருந்தாலும் தமிழக பதிவு எண் உடைய லாரிகள் அதிகபட்சம் 2 டன் அளவுக்கு மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.


கோவை: கோவையில் இருந்து கேரளாவுக்கு அனுமதியின்றி கனிம வளங்களை கடத்தி சென்றதாக, 18 லாரிகள் சிறைபிடிக்கப்பட்டு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

கோவை மதுக்கரை, பெரியகுயிலி, தேக்காணி, செட்டிப்பாளையம் உட்பட சுற்றுப்பகுதிகளில் இருந்து பெரிய சைஸ் கருங்கற்கள், சிறிய ஜல்லி கற்கள் வெட்டி எடுக்கப்படுகின்றன. இவை அண்டை மாநிலமான கேரளாவுக்கு அனுமதியின்றி எடுத்து செல்லப்படுகின்றன.

உரிமம் இருந்தாலும், தமிழக பதிவு எண் உடைய லாரிகள் அதிகபட்சம், 2 டன் அளவுக்கு மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகின்றன.

இந்த அளவை மீறி எடுத்து சென்றால், ஒவ்வொரு டன்னுக்கும் 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. அதேநேரம், கேரளா பதிவு எண் உடைய லாரிகளில் கோவையில் இருந்து ஒவ்வொரு லாரியிலும் குறைந்தது, 10 முதல், 20 டன் வரை கற்கள் எடுத்து செல்லப்படுகின்றன. இதை கனிமவளத்துறை மற்றும் போலீசார் கண்டுகொள்வதில்லை.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று காலை வரை, கனிமவள பொருட்களை எடுத்து சென்ற கேரளா பதிவு எண் கொண்ட 18 லாரிகளை, தமிழக லாரி டிரைவர்கள் சிறைபிடித்தனர். இவை செட்டிப்பாளையம் காவல் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.

இதையடுத்து, கேரளாவை சேர்ந்த லாரி உரிமையாளர்கள் செட்டிப்பாளையம் காவல் நிலையம் வந்து தகுந்த உரிமத்துடன் தான் பொருட்களை எடுத்து செல்வதாக தெரிவித்தனர்.

இறுதியில் நேற்று மாலை 18 லாரிகளுக்கும் போலீசார் அபராதம் விதித்து விடுவித்தனர்.

Newsletter

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...