உணவு பார்சலில் பல்லி இருக்கும் காட்சிகள் வைரலாகி வரும் நிலையில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை: கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் வாங்கிய சாம்பாரில் பல்லி இருந்த சம்பவம் வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சித்தாபுதூர் விகேகே மேனன் சாலையில் "இட்லி விருந்து'' என்ற பெயரில் தனியார் ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது.

இந்த உணவகத்துக்கு நேற்றிரவு தனது நண்பர்களுடன் வந்த அதே பகுதியைச் சேர்ந்த ராமமூர்த்தி என்பவர் இட்லி, பணியாரம் உடன் சாம்பார் பார்சல் வாங்கிச் சென்றுள்ளார். வீட்டுக்குச் சென்று பார்சலை பிரித்து சாப்பிட முயன்றபோது சாம்பாரில் உயிரிழந்த நிலையில் பல்லி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதையடுத்து, உடனடியாக பல்லி இருந்த பார்சலை எடுத்துச்சென்ற ஏழுமலை, ஹோட்டல் ஊழியர்களிடம் முறையிட்டபோது, ஹோட்டல் உரிமையாளர் தற்போது கடையில் இல்லை என தெரிவித்த அவர்கள், மீண்டும், காலை வந்து பார்க்குமாறு மெத்தனமாக பதிலளித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, உணவு பார்சலில் பல்லி இருப்பதை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்த அவர், அதனை வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
இந்த காட்சிகள் வைரலாகி வரும் நிலையில், வீடியோ பதிவை ஆதாரமாகக் கொண்டு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்க உள்ளதாக ராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.