பஞ்சாப் சம்பவத்திற்கு தமிழக முதல்வர் கண்டனம் தெரிவிக்க வேண்டும் - கோவையில் பாஜக சிறுபான்மையினர் பிரிவு செயலாளர் வேலூர் இப்ராஹிம்

பஞ்சாப் மாநில அரசை கண்டித்து பாஜக சிறுபான்மையினர் பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் தலைமையில் பாஜக வினர் இன்று கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.


கோவை: பஞ்சாப் மாநில அரசை கண்டித்து பாஜக சிறுபான்மையினர் பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் தலைமையில் பாஜக வினர் இன்று கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

கடந்த 6 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பஞ்சாப் மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் சென்றபோது, பல்வேறு அமைப்பினர் பிரதமருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பிரதமரின் சுற்றுப்பயணம் ரத்து ஆனது. இச்சம்பவம், பாஜகவினர் மற்றும் இந்து அமைப்பினர் இடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தை கண்டித்து, பாஜகவினர் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.



அதன் ஒரு பகுதியாக, கோவை கணுவாய் பகுதியில், பாஜக சிறுபான்மையினர் அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இதில், பஞ்சாப் மாநில அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.



ஆர்ப்பாட்டத்தில், கண்டன உரையாற்றிய வேலூர் இப்ராஹிம், பிரதமர் நாட்டில் எங்கு செல்ல வேண்டுமானாலும் அவருக்கு அனுமதி உண்டு. அப்படி இருக்கையில், பஞ்சாபில் நடைபெற்றுள்ள சம்பவம் கண்டனத்திற்குரியது. இதற்கு பஞ்சாப் மாநில அரசு தான் காரணம்.

பஞ்சாப் மாநில முதலமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும். இதற்கு தமிழக முதல்வர் கண்டனம் தெரிவிக்க வேண்டும். தமிழக அரசு பாஜகவினர் எது செய்தாலும் அதற்கு வழக்குகள் போடுகிறது, என்று குற்றம் சாட்டினார்.

Newsletter

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...