தொற்று பரவலை கட்டுப்படுத்த கோவை ஆட்சியரிடம் சட்டமன்ற உறுப்பினர்கள் மனு

கோவை மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


கோவை: கோவை மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



கோவை மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் 10-பேரும் இணைந்து மாவட்ட ஆட்சியரிடம் பல்வேறு கோரிக்கைகளை மனுவாக அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

1. கோவை மாவட்ட நிர்வாகம் மாநகராட்சி நிர்வாகம் இணைந்து தெருக்கள்தோறும் கிருமி நாசினிகளைத் தெளிக்க வேண்டும்.

2. பேருந்துகளுக்குக் கிருமி நாசினிகள் தெளிக்கப்படுவதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும்.

3. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் கொரோனா வார்டுகள் அமைத்து ஆக்சிஜன் படுக்கைகளை உயர்த்த நடவடிக்கை வேண்டும்.

4. மருந்துகள் தட்டுப்பாடின்றி கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

5. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காலியாக உள்ள படுக்கை விவரங்களை மக்களுக்குத் தெரிவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

6. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

7.ஆம்புலன்ஸ் எண்ணிக்கையை அதிகப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

8. கோவை மாவட்ட எல்லைகளிலும் விமான நிலையங்களிலும் பயணிகளுக்குப் பரிசோதனை செய்து மாவட்டத்திற்குள் அனுமதிக்க வேண்டும்.

9. கோவை மாவட்டத்தில் உள்ள பெரிய பெரிய தொழிற்சாலைகள் மற்றும் நூற்பாலைகளில் பணிபுரியும் பணியாளர்கள் இருந்தது ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிற்சாலைகளும் அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

10. தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு அதிகமாக வசூலிப்பதைத் தடுக்க கண்காணிப்புக் குழு அமைத்துக் கண்காணிக்க வேண்டும்.

11. பொது இடங்களில் மக்களுக்கு விழிப்புணர்வு நடைபெற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

12. முழு ஊரடங்கு நேரங்களில் சாலையோரம் வசிப்பவர்கள் ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

13. மாநகராட்சி நிர்வாகத்தால் ரத்து செய்யப்பட்ட மாநகராட்சி ஒப்பந்தப் பணிகளைப் போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும்.

14. குனியமுத்தூர் பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தைப் புலியை மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத் துறையினர் உடனடியாக பிடிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

15. கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் விசைத்தறி தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ஆகிய கோரிக்கைகள் மனுவில் அடங்கியுள்ளன.

Newsletter

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...