கோவையில் உதயநிதி ஸ்டாலின் நடத்திய கூட்டத்தில் பரவாத கொரோனா, கோவில்களை திறப்பதால் பரவி விடுமா..? - அர்ஜுன் சம்பத் கேள்வி

கிராமத்தில் உள்ள கோவில்களை திறக்க அனுமதிக்க வேண்டும். கொரோனா ஊரடங்கு விதிமுறைகளுக்கு உட்பட்டு கோவில்களை திறந்து பக்தர்களை அனுமதிக்க வேண்டும்.



திருப்பூர்: கோவையில் உதயநிதி ஸ்டாலின் நடத்திய கூட்டத்தில் பரவாத கொரோனா கோவில்களில் பரவி விடுமா? திமுக அரசு இந்து விரோத, கோவில் விரோத அரசாக செயல்பட கூடாது என திருப்பூரில் இந்து மக்கள் கட்சியின் தலைவர், அர்ஜுன் சம்பத் கேள்வி எழுப்பியுள்ளார்.



சுதந்திர போராட்ட வீரர் தியாகி திருப்பூர் குமரனின் 90வது நினைவு நாளை முன்னிட்டு இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜின் சம்பத் திருப்பூர் ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள திருப்பூர் குமரன் நினைவகத்தில் உள்ள குமரன் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.



பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தேசத்தலைவர்கள் அடையாளத்தை அழித்து விட்டு கருணாநிதி மற்றும் ஈ.வே.ரா சிலையை வைப்பது தவறு. இதைக் கேட்க வேண்டிய காங்கிரஸ் கட்சி, திமுகவுடன் கூட்டணி சேர்ந்து வேடிக்கை பார்க்கிறது. குமரன் நினைவிடம் அருகே அமைக்கப்பட்டுள்ள பெரியார், அண்ணா சிலைகளை கோர்ட்டு உத்தரவுபடி உடனடியாக அகற்ற வேண்டும்.

கிருஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் கோவையில் உதயநிதி ஸ்டாலின் நடத்திய கூட்டத்தில் பரவாத கொரோனா பொங்கல் பண்டிகை அன்று கோவிலுக்கு செல்வதால் பரவி விடுமா? கிராமத்தில் உள்ள கோவில்களை திறக்க அனுமதிக்க வேண்டும். கொரோனா ஊரடங்கு விதிமுறைகளுக்கு உட்பட்டு கோவில்களை திறந்து பக்தர்களை அனுமதிக்க வேண்டும்.

உலக சுகாதார நிறுவன மருத்துவ குழுவினரே, பொது முடக்கம் கொரோனாவிற்கு தீர்வு இல்லை என்று தெரிவித்துள்ளனர். பொது முடக்கம் வந்தால் நாடு தாங்காது. இதனை நான் மட்டும் சொல்லவில்லை. முதல்வர் ஸ்டாலின் கூட இதனை தெரிவித்துள்ளார். டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளது, சிறப்பு விற்பனை கூட செய்கிறார்கள். கோவில்களை திறக்க கோரி இந்து மக்கள் கட்சி அறவழியில் போராட்டத்தை நடத்தும்.. திமுக அரசு இந்து விரோத, கோவில் விரோத அரசாக செயல்பட கூடாது, என்று தெரிவித்தார்.



இதேபோன்று, திருப்பூர் குமரன் நினைவகத்தில் இன்று காலை முதல் குமரன் சிலைக்கு மாலை அணிவித்து பாஜக, நாம் தமிழர், சிவசேனா, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.

Newsletter

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...