கோவையில் அரசுப் பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் காயமடைந்த மாணவர் உயிரிழப்பு..! கொலை வழக்காக மாற்றி விசாரணை!

கத்திக்குத்து ஏற்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


கோவை: கோவையில் அரசுப் பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் காயமடைந்த மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பேரூர் அருகே ஆலாந்துறை பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வரும் மாணவர்களுக்கு இடையே கடந்த 2 நாட்களுக்கு முன்பு திடீரென மோதல் ஏற்பட்டது.

அப்போது, ஒரே ஒரு மாணவனை 15 பேர் தாக்கியதாக கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த மாணவர்கள் தன்னை தாக்கிய மாணவர்களிடம் சென்று கைகலப்பில் ஈடுபட்டனர். அப்போது, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாக தாக்கியதில் 3 மாணவர்களுக்கு கத்திக்குத்து விழுந்தது.

ஒரு மாணவருக்கு தலையில் ஆழமாக குத்து விழுந்ததால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

மேலும், இதுகுறித்து அவர்களை போலீசார் வழக்குப்பதிவு செய்து முன்னாள் மாணவர் மற்றும் அதே பள்ளியில் பிளஸ் டூ படிக்கும் மாணவர் ஆகிய 2 பேரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

இந்நிலையில், மற்ற மாணவர்களுக்கும் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கத்திக்குத்து ஏற்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.

Newsletter

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...