கிணத்துக்கடவில் இரு சக்கர வாகனம் மீது வேன் மோதி விபத்து

கிணத்துக்கடவு அருகே தாமரைகுளம் பகுதியில், இருசக்கர வாகனம் மீது ஈச்சர் வேன் மோதி ஏற்பட்ட விபத்தில் கூலித் தொழிலாளிக்குக் கால் முறிவு ஏற்பட்டது.


கோவை: கிணத்துக்கடவு அருகே தாமரைகுளம் பகுதியில் இருசக்கர வாகனம் மீது ஈச்சர் வேன் மோதி ஏற்பட்ட விபத்தில் கூலித் தொழிலாளிக்குக் கால் முறிவு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம் அவினாசி ராயர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கதிர்வேல்(26) கூலித் தொழிலாளியான இவர், நேற்று அவினாசியிலிருந்து இருசக்கர வாகனத்தில் பொள்ளாச்சி நோக்கி வந்து கொண்டிருந்தார்.

அப்போது கிணத்துக்கடவை அடுத்துள்ள தாமரைக்குளம் அருகே வந்து கொண்டிருக்கும் போது எதிரே அதிவேகமாக, கவனக்குறைவாக வந்த ஈச்சர் வேன், கதிர்வேல் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் கதிர்வேலுக்குக் கால் முறிவு ஏற்பட்டு பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், இந்த விபத்து குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...