மணியகாரம்பாளையம் முதல் நஞ்சே கவுண்டன்புதூர் வரை 5 கிலோமீட்டர் தூரத்துக்கு மிக மோசமான நிலையில் உள்ள சாலையை சீர் செய்ய கவன ஈர்ப்பு போராட்டம்.
கோவை: கோவையில் பழுதடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி சாலைக்கு மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நூதன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மேட்டுப்பாளையம் சாலையில் மேம்பால கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் காந்திபுரம் பகுதியில் இருந்து துடியலூர் செல்லும் கனரக வாகனங்கள் கணபதி, மணியகாரம்பாளையம் வழியாக மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. இதனால், மணியகாரம்பாளையம் முதல் நஞ்சே கவுண்டன்புதூர் வரை 5 கிலோமீட்டர் தூரத்துக்கு சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளது.
இந்த பழுதடைந்த சாலையை சீரமைத்து தர கோரி நஞ்சே கவுண்டன்புதூர் பகுதியில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் நூதன முறையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள், மாலை மற்றும் மலர் வளையங்களை, மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து, பழுடடைந்த சாலைக்கு மாலை அணிவித்தும் மலர் வளையம் வைத்தும் அஞ்சலி செலுத்தினர்.
மேலும், சாலையை உடனடியாக சீரமைத்து தர கோரி நெடுஞ்சாலை துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இதில், பெண்கள் உட்பட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பெரும் விபத்துக்கள் மற்றும் மரணத்தை கூட ஏற்படுத்தக்கூடிய, பழுதடைந்த சாலைக்கு இறுதி ஊர்வலம் நடத்திய சம்பவம் வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்களின் கவனத்தை ஈர்த்தது.