கோவை வெள்ளலூரில் பெரியார் சிலை அவமதிப்பு செய்யப்பட்ட விவகாரம்: பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம்..!

ஆர்ப்பாட்டத்தில், திராவிடர் கழகம், திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டு இந்துத்துவா அமைப்பை சேர்ந்தவர்கள் பெரியார் சிலைக்கு அவமரியாதை செய்து இருப்பதாக குற்றம் சாட்டினர்.


கோவை: கோவை வெள்ளலூர் பகுதியில் திராவிடர் கழகத்தினர் நடத்தி வரும் பகுத்தறிவு படிப்பகம் முன்பு அமைக்கப்பட்ட பெரியார் சிலையின் மீது கடந்த 9 ஆம் தேதி நள்ளிரவில் அடையாளம் தெரியாத நபர்கள் செருப்பு மாலை மற்றும் காவி பொடி தூவியும் அவமதிப்பு செய்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.



இது குறித்து போத்தனூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், வெள்ளலூர் பகுதியில் அனைத்துக் கட்சி சார்பில் பெரியார் சிலையை அவமதித்தவர்களை மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகம், திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டு இந்துத்துவா அமைப்பை சேர்ந்தவர்கள் பெரியார் சிலைக்கு அவமரியாதை செய்து இருப்பதாகவும், இதேபோல தொடர்ந்து பெரியார் சிலைகள் அவமதிக்கப்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டினர்.



மேலும், குற்றவாளிகள் மீது காவல் துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...