கோவையில் ரேசன் கடைகளில் பொங்கல் பரிசுப் பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா? என மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

கோவை தெப்பக்குளம் வீதியில் உள்ள ராமலிங்க சவுடேஸ்வரி கூட்டுறவு பண்டகசாலையில் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அரசு அறிவித்த 21 பொருட்களும் பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறதா? மற்றும் அதன் தரம் குறித்து மக்களிடம் கேட்டறிந்தார்.



கோவை: கோவையில் ரேசன் கடைகளில் வழங்கப்பட்டு வரும் தமிழக அரசின் பொங்கல் பரிசுப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு மக்களுக்கு முறையாக வழங்கப்படுகிறதா? என்பதை கண்டறிய மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழக அரசு சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பு ரேசன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. கோவையில் 10.78 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு, இந்த பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.



இந்நிலையில், கோவை பூமார்க்கெட் பகுதியில் உள்ள தெப்பக்குளம் வீதியில், ராமலிங்க சவுடேஸ்வரி கூட்டுறவு பண்டகசாலையில் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.



அப்போது, அரசு அறிவித்த 21 பொருட்களும் பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறதா? என்பதையும், பொருட்களின் தரம் குறித்தும் ஆய்வு செய்தார்.



தொடர்ந்து, அங்கு வந்த பொதுமக்களிடம், பொருட்களின் தரம் குறித்து அவர் கேட்டறிந்தார்.தரமான பொருட்களை வழங்குவதோடு, அனைத்து பொருட்களும் பொதுமக்களுக்கு சென்று சேருவதை உறுதி செய்ய வேண்டும் என அவர் ஊழியர்களுக்கு அப்போது அறிவுறுத்தினார்.

Newsletter

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...