கோவையில் குடியிருப்பு பகுதியில் செயல்பட்டு வரும் பெரியளவிலான பிரியாணி கூடத்தில் இருந்து வெளியாகும் கரும் புகையால் அவதி - ஆட்சியரிடம் மனு

கோவை சாய்பாபா காலனி சின்னம்மாள் வீதி, கிருஷ்ணசாமி கோனார் தோட்டம் அருகே செயல்பட்டு வரும் பிரியாணி தயாரிக்கும் இடத்தில் இருந்து ஏற்படும் புகையால் மற்றும் கோழிக் கழிவுகளால் மக்கள் அவதி என்று புகார்.


கோவை: அதிக அளவிலான கரும்புகை மற்றும் கழிவுகளை வெளியேற்றி குடியிருப்பு பகுதியில் செயல்பட்டு வரும் மிகப்பெரிய அளவிலான பிரியாணி உணவு தயாரிப்பு கூடத்தை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

மனுவை, சமூக நீதி கட்சி மேற்கு மண்டல செயலாளர் ஆதி கணேசன், மாவட்ட செயலாளர் ஜெய் பீம் பாலு தலைமையில் அக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சார்பில் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

அந்த மனுவில், கோவை சாய்பாபா காலனி சின்னம்மாள் வீதி, கிருஷ்ணசாமி கோனார் தோட்டம் அருகில் உள்ள மவுண்ட் கார்டன் அபார்ட்மெண்ட் உள்ளது. அது, கோவை மாநகராட்சி எட்டாவது வார்டுக்கு உட்பட்டது. இந்த பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட வீடுகளில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். இங்கு ஓய்வுபெற்ற அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் மற்றும் முதியவர்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இந்த பகுதி குடியிருப்புக்கு என ஒதுக்கப்பட்ட பகுதியாகும்.

இந்த நிலையில், கிருஷ்ணசாமி கோனார் தோட்டம் பகுதியில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான பிரியாணி தயாரிப்புக் கூடம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பிரியாணி கூடத்தில் உணவு வகைகள் அனைத்தும் விறகு அடுப்பு கொண்டு சமையல் செய்யப்படுகிறது. சமையலை துவக்குவதற்கு முன்பு பிளாஸ்டிக் கழிவுகள், எண்ணெயில் முக்கிய துணி மற்றும் கழிவு எண்ணெய்களை ஊற்றி எரிக்கின்றனர்.

இதன் காரணமாக, இந்த பகுதியில் சுமார் ஒரு கிலோ மீட்டர் அளவிற்கு புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. 24 மணி நேரமும் செயல்படும் இந்த பிரியாணி தயாரிப்பு கூடத்தில் அசைவ உணவுகள் அதிக அளவில் தயாரிக்கப்படுகிறது. அதற்காக கோழிகள் உயிருடன் கொண்டுவரப்பட்டு கூண்டில் அடைக்கப்பட்டு உள்ளது. மேலும், அந்த கோழிகள் இந்த உணவு கூடத்திலேயே வெட்டப்படுகிறது. அதனுடைய கழிவுநீர் அனைத்தும் மாநகராட்சி சாக்கடையில் சுத்திகரிப்பு செய்யாமல் நேரடியாக கலக்கப்படுகிறது.

இதன் காரணமாக, இந்த பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் எப்பொழுதும் வீசி வருகிறது. மேலும், பிரியாணி மசாலா தயாரிக்கும் பொழுது அதனுடைய நெடி இந்த பகுதி முழுவதும் பரவி ஒரு விதமான மூச்சு திணறல் உருவாக்கும் சூழலை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் அனைவரும் கதவு, ஜன்னகளை பூட்டிவிட்டு வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டிய சூழல் உள்ளது.

மேலும், இதன் காரணமாக பலர் வாடகை வீடுகளை காலி செய்து விட்டு வேறு பகுதிக்கு சென்றுவிட்டனர். 24 மணிநேரமும் இங்கு உணவுகள் தயாரிக்கப்பட்டு வருவதால், இதற்காக பொருள்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மற்றும் பிரியாணி பாத்திரங்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களும் வந்து செல்கிறது. குறுகலான தெருக்களுக்குள் பெரிய அளவிலான கனரக வாகனங்களை இயக்கி பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றனர்.

மேலும், பாத்திரங்களை தரையில் போட்டு இழுப்பதினால் ஏற்படும் சத்தமும் இப்பகுதி முழுக்க கேட்கிறது. அதேபோல, இந்த நிறுவனத்தின் உட்புறமுள்ள ஊழியர்களை அழைப்பதற்காக ஸ்பீக்கர் மற்றும் மைக் செட்டுகள் அமைத்துள்ளனர். இதன் மூலம் அவ்வப்போது அறிவிப்புகளை வெளியிட்டுக் கொண்டு அதன் சத்தமும் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது. இது குறித்து அந்த நிறுவனத்திடம் பொதுமக்கள் சார்பில் சென்று பேசியபொழுது, சிம்னி அமைத்து புகையை வெளியே வருவதாக கூறினர். ஆனால், இதுவரையில் சிம்னி அமைத்து புகையை வெளியில் விடாமல் நேரடியாக விட்டு வருகின்றனர். இதன்

அதிக அளவிலான கரும்புகை மற்றும் கழிவுகளை வெளியேற்றி குடியிருப்பு பகுதியில் செயல்பட்டுவரும் மிகப்பெரிய அளவிலான பிரியாணி உணவு தயாரிப்பு கூடத்தை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

Newsletter

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...