திருப்பூர் அருகே தனியார் இரும்பு ஆலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்..!

தாராபுரம் வடுகபாளையம் பகுதியில் தனியார் இரும்பு ஆலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் மற்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வடுகபாளையம் பகுதியில் தனியார் இரும்பு ஆலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் மற்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த வடுகபாளையம் பகுதியில் தனியார் இரும்பு ஆலை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு அப்பகுதியைச் சுற்றியுள்ள சங்கராண்டாம்பாளையம், சூரியநல்லூர் கண்ணாங்கோவில் உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இங்கு இரும்பு ஆலை அமையும் பட்சத்தில் காற்று மாசுபாடு, நீர் மாசுபாடு, சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படும். இதன் காரணமாக வேளாண்மையும், கால்நடை வளர்ப்பும் மிக கடுமையாக பாதிக்கப்படும்.

எனவே, இங்கு இரும்பு ஆலை அமைக்க அரசு அனுமதிக்கக்கூடாது என பல்வேறு கட்டமாக கிராம மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். மேலும் தாராபுரம் வட்டாட்சியர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் என அரசு அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.



இதனிடையே, தனியார் இரும்பு ஆலை அமைக்க அரசு அனுமதி அளிக்கக் கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி 5 கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் தமிழக விவசாயிகள் பாதிக்கப்படுவதாக நூற்றுக்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

Newsletter

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...