இன்று முதல் கோவையில் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி போடும் பணிகள் துவக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் மூன்றாவது தவணை தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார். கோவை மாவட்டத்தில் முன்களப் பணியாளர்கள் உட்பட 2.49 பேர் பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்ள அடையாளம் காணப்பட்டுள்ளனர்.



கோவை: கொரோனா வைரஸ் தொற்று தற்போது மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், தமிழக அரசு சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசி, அதாவது பூஸ்டர் டோஸ் செலுத்த அரசு பரிந்துரைத்துள்ளது.

அதன்படி, இன்று முதல் கோவை மாவட்டத்தில் அதற்கான பணிகள் துவங்கின.



கோவை மாவட்டத்திலும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில், நாள் ஒன்றுக்கு 500 பேர் வரை தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். அரசின் பரிந்துரைப்படி, இன்று முதல் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளன.

கோவை அரசு மருத்துவமனையில் மூன்றாவது தவணை தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார். கோவை மாவட்டத்தில் சுகாதாரப் பணியாளர்கள் 85,554, முன்கள பணியாளர்கள் 96,762, 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 72,000 என மொத்தம் 2 லட்சத்து 49 ஆயிரம் பேர், பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்ள அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் வரும் ஜனவரி மாத இறுதிக்குள் 70 ஆயிரம் பேருக்கு இந்தத் தடுப்பூசியைப் போட இணைக்கப்பட்டுள்ளதாகவும், மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.



மேலும், கோவை மாவட்டத்தில் உள்ள மொத்த கொரோனா கேர் சென்டர்களில் 4300 படுக்கைகளும், 5,000 ஆக்சிஜன் படுக்கைகளும் தயார் நிலையில் உள்ளதால், மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். அதே சமயம், மக்கள் கட்டாயமாக முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது ஆகியவற்றைகடைப்பிடிக்க வேண்டும் என்றும் தகுதியுள்ள நபர்கள் அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசி கட்டாயமாக செய்தி கொள்ள வேண்டும் எனவும் கோவை ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.



Newsletter

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...