மத்திய அரசு அதிகாரி என கூறியது, ,மத்திய அரசின் பெயரை தவறுதலாக பயன்படுத்தியது, மோசடி என மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர்.
கோவை: மேட்டுப்பாளையம் அருகே
சிறுமுகையில் கைத்தறி பட்டு உற்பத்தியாளர்களிடம் மத்திய அரசு அதிகாரி என மிரட்டி பணம் பறிக்க முயன்ற சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகையில் கிச்சகத்தியூர் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பவர்அதே பகுதியில் ஆசிரமம் வைத்து நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், இவர் சிறுமுகையில் உள்ள கைத்தறி பட்டு உற்பத்தியாளர்களிடம் நீங்கள் போலி பட்டு சேலைகளை விற்பனை செய்கிறீர்கள்.நான் அகில இந்திய நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரி, என கூறி மிரட்டி வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ராஜ்குமார் தனது காரில் மத்திய அரசு அதிகாரி என ஸ்டிக்கர் ஒட்டிய வாகனத்தில், சிறுமுகையில் உள்ள ஒரு தனியார் ஜவுளி பட்டு சேலை கடை வைத்துள்ள நாகராஜ் என்ற வியாபாரியிடம்
வந்துள்ளார்.அப்போது, தன்னை மத்திய அரசு அதிகாரி எனவும் கடைகளில் போலி பட்டு சேலைகளை விற்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது என்றுக் கூறி உரிய ஆவணங்களை கேட்டதுடன், பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, சிறுமுகை அனைத்து கைத்தறி பட்டு சேலை உற்பத்தி மற்றும் விற்பனையாளர் சங்கம் சார்பில் அதன் தவைவர் நாகராஜ் போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில், சிறுமுகை போலீசார் விசாரணை நடத்தி கிச்சகத்தூரில் பதுங்கியிருந்த சாமியார் ராஜ்குமாரை கைது செய்தனர்.
அவர் மீது மத்திய அரசு அதிகாரி என கூறியது, ,மத்திய அரசின் பெயரை தவறுதலாக பயன்படுத்தியது,மோசடி செய்தது என மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ள போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.