கோவை வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை சிவதாஸ் மீனா ஐ ஏ.எஸ் நேரில் ஆய்வு; விரைந்து  முடிக்க உத்தரவு.

வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை கூடுதல் தலைமைச் செயலாளரூம், நகராட்சி நிா்வாக மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளருமான சிவதாஸ் மீனா ஐ. ஏ.எஸ் நேரில் ஆய்வு செய்தார். அப்போது, பணிகளை விரைந்து முடிக்க பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்.


கோவை: கோவை வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை சிவதாஸ் மீனா ஐ. ஏ.எஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



கோவை வெள்ளலூர் பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் மற்றும் கழிவுநீர் சுத்திகாிப்பு நிலைய கட்டுமானப் பணிகளை கூடுதல் தலைமைச் செயலாளரூம் நகராட்சி நிா்வாக மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளருமான சிவதாஸ் மீனாநேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஜனவரி 2020 இல், ரூபாய். 168 கோடி மதிப்பீட்டில் கோவை மாநகராட்சியின் சார்பாகநடைபெற்றுவரும் வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய கட்டுமானப் பணிகள், குறிச்சி குனியமுத்தூர் பாதாள சாக்கடை திட்ட பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்.



பின்னர், வெள்ளலூர் குப்பை கிடங்கில் பயோமைனிங் திட்டத்தின் கீழ் மக்கும் மக்கா குப்பைகளை தரம் பிரித்து மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை நேரில் பார்வையிட்ட அவர், அங்கு தேங்கி உள்ள பழைய குப்பைகளை 68 ஏக்கர் நிலத்தை திட்டகாலத்திற்குள் மீட்டெடுக்க வேண்டும், என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.



இந்த ஆய்வின் போது, நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா ஐஏஎஸ், மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா, துணை ஆணையாளர் ஷர்மிளா, நிர்வாக பொறியாளர் ராமசாமி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறியாளர் செங்குட்டவன், தெற்கு மண்டல உதவி ஆணையாளர் அண்ணாதுரை மாநகராட்சி நிர்வாக பொறியாளர் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் உடனிருந்தனர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...