ஆனைமலையில் ரயில்வே ஸ்டேஷனில் அடிப்படை வசதிகள் கோரி மனு: அதிகாரிகள் அலட்சியம்

ஆனைமலை ரோடு ரயில்வே ஸ்டேஷனில் அடிப்படை வசதிகள் கோரி மனு அளித்தநிலையில், பாலக்காடு கோட்ட அதிகாரிகளின் அலட்சிய பதிலால் பயணிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.


பொள்ளாச்சி :ஆனைமலை ரோடு ரயில்வே ஸ்டேஷனில் அடிப்படை வசதிகள் கோரி மனு அளித்தநிலையில், பாலக்காடு கோட்ட அதிகாரிகளின் அலட்சிய பதிலால் பயணிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

பொள்ளாச்சி பாலக்காடு ரயில்வே வழித்தடத்தில், சுப்பேகவுண்டன்புதூர் அருகே அமைந்துள்ளது. ஆனைமலை ரோடு ரயில்வே ஸ்டேஷன் இங்கிருந்து, பல்வேறு பணிகளுக்காகப் பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு செல்லும் பயணிகள் தினசரி ரயில் சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும், தென் மாவட்டங்களிலிருந்தும் கேரளா உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் மாசாணியம்மன் கோயில் வரும் பக்தர்கள் பயன்படுத்தும் முக்கிய ரயில் நிறுத்தமாக உள்ளது. ஆனால், ஆனைமலை ரோடு ரயில்வே ஸ்டேஷனில், குடிநீர், கழிப்பிடம், மின் விளக்கு போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் பராமரிப்பதில்லை, உடனே இதைச் சீரமைக்க வேண்டும் என்று, ரயில் பயணிகள் நலச் சங்கம் சார்பில் பாலக்காடு கோட்ட அதிகாரிகளுக்கு ஆன்லைன் மூலம், மனு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், பாலக்காடு பொள்ளாச்சி வழித்தடத்தில் உள்ள ஆனைமலை ரோடு ரயில்வே ஸ்டேஷனில், சராசரியாக ஒரு நாளைக்கு 15-பயணிகள் மட்டுமே பயணம் செய்கின்றனர். ஸ்டேஷனில் உள்ள குடிநீர் குழாய்கள், மின் விளக்குகள் போன்றவற்றை சமூக விரோதிகள் சேதப்படுத்தியுள்ளனர்.

அவர்கள் மீது ஸ்டேஷன் மாஸ்டர் மூலம் காவல்துறையில் புகார் அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயணிகள் எண்ணிக்கை கூடும் பட்சத்தில், அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும் என்று, தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலக்காடு கோட்ட அதிகாரிகளின் இந்த பதில், ரயில் சேவையைப் பயன்படுத்தும் பயணிகள் இடையே பெரும் அதிர்ப்த்தியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுமக்களின் அத்தியாவசிய, அடிப்படைத் தேவையான குடிநீர் மற்றும் கழிப்பறைகள் இல்லாமல் ரயில்வே ஸ்டேஷன் இயங்குவதால் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், பாலக்காடு கோட்ட அதிகாரிகளின் இந்த பதில் கண்டனத்துக்குரியது என்று, தெரிவித்துள்ள ரயில் பயணிகள் நலச்சங்கத்தினர், பாலக்காடு கோட்ட ரயில்வே அதிகாரிகள் பயணிகளின் நலனைக் கவனத்தில் கொண்டு, அடிப்படை வசதிகளை மேம்படுத்தித் தர வேண்டும் என்று, கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...