பொள்ளாச்சியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது

பொள்ளாச்சி பகுதியைப் பொருத்தவரை கடைவீதி, மார்க்கெட், ரோடு சத்திரம் வீதி உள்ளிட்ட அனைத்து வீதிகளிலும் உள்ள வர்த்தக நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டு மக்கள் நடமாட்டமின்றி காணப்படுகிறது.


கோவை: பொள்ளாச்சியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது.

தமிழகத்தில் ஒமிக்ரான், கொரோனா பரவலைக்கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு இன்று நடைமுறைக்கு வந்துள்ளது.

பொள்ளாச்சி பகுதியைப் பொருத்தவரை கடைவீதி, மார்க்கெட், ரோடு சத்திரம் வீதி உள்ளிட்ட அனைத்து வீதிகளிலும் உள்ள வர்த்தக நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டு மக்கள் நடமாட்டமின்றி காணப்படுகிறது.



அதேபோல மாநில எல்லைகளான கோபாலபுரம், கோவிந்தாபுரம், மீனாட்சிபுரம் உள்ளிட்ட ஏழு சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அதேபோல் மாவட்ட இணைப்பு சாலைகள் என கோவை சாலை, உடுமலை சாலை, மீன்கரை சாலை உள்ளிட்ட அனைத்து சாலைகளிலும் தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தேவையில்லாமல் வெளியில் வருபவர்களை நிறுத்தி அவர்களை அறிவுறுத்தி வருகின்றனர்.



ஹோட்டல்கள் திறக்கப்பட்டு பார்சல் சேவை மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.

பால் வினியோகம், மருந்தகங்கள் மற்றும் திறக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்று வருகிறது. ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளன.

Newsletter

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...