கிணத்துக்கடவில் பெண் தீக்குளித்து தற்கொலை வழக்கு- விவசாயி கைது

கிணத்துக்கடவு அருகே தேவராயபுரம் பகுதியில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட வழக்கு தொடர்பாக விவசாயி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


கோவை: கிணத்துக்கடவு அருகே தேவராயபுரம் பகுதியில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட வழக்கு தொடர்பாக விவசாயி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள தேவராயபுரம் காட்டு சாலை பகுதியில் வசித்து வரும் ஞானபிரகாஷின் மனைவி ரோகினி கடந்த 1 ஆம் தேதி தின்னரை ஊற்றி தீக்குளித்தார். அவரை காப்பாற்றச் சென்ற கணவர் ஞானப்பிரகாசம் காயமடைந்தார்.

இருவரையும் மீட்டு கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 6 ஆம் தேதி மாலை சிகிச்சை பலனின்றி ரோகிணி உயிரிழந்தார்.

இது குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே பலத்த தீ காயத்துடன் இருந்த ரோகிணியிடம் மரணம் வாக்குமூலம் பெற்றதில் தனது பக்கத்துத் தோட்டத்தில் வசிக்கும் சக்தி சண்முகம் என்பவர் தன்னையும் தனது கணவரையும் கெட்டவார்த்தையால் திட்டியதால் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதனடிப்படையில் கிணத்துக்கடவு போலீசார் ரோகிணியை தற்கொலைக்குத் தூண்டியதாக தேவராயபுரம் பகுதியைச் சேர்ந்த சக்தி சண்முகம் என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...