கோவையில் ரெயில் என்ஜின் மோதி கல்லூரி மாணவர் உள்பட 2-பேர் பலி

கோவை அருகே ரெயில் என்ஜின் மோதி கல்லூரி மாணவர் உள்பட 2-பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவை அருகே ரெயில் என்ஜின் மோதி கல்லூரி மாணவர் உள்பட 2-பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர்கள் மணிகண்டன் (17), விஜய கிருஷ்ணன் (18) மற்றும் ஸ்ரீகாந்த் (18). இதில் விஜய கிருஷ்ணன், ஸ்ரீ காந்த் ஆகியோர் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்தனர். மணிகண்டன் வேலை தேடி வந்தார்.

இந்த நிலையில் இவர்கள் 3 பேரும் நேற்று இரவு 7.30 மணியளவில் கவுண்டம்பாளையம் அருகே உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் நடந்து சென்றுகொண்டு இருந்தனர். அப்போது அவர்கள் சொல்போனை பார்த்தவாறு சென்றதாக கூறப்படுகிறது.

அந்த நேரத்தில் மேட்டுப்பாளையத்திலிருந்து கோவையை நோக்கி வந்த ரெயில் என்ஜின் ஒன்று எதிர்பாராதவிதமாக மணிகண்டன், விஜயகிருஷ்ணன் ஆகியோர் மீது மோதியது. இதில் 2 பேரும் தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

ஆனால் ஸ்ரீகாந்த் மட்டும் ரெயில் என்ஜினை பார்த்ததும் தண்டவாளத்திலிருந்து கீழே இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் மேட்டுப்பாளையம் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

பின்னர் ரெயிலில் அடிபட்டு பிணமாக கிடந்த 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இதுகுறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேற்று இரவில் ரெயில் என்ஜினில் மோதி கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலியான சம்பவம் கோவையில் சோகத்தை ஏற்படுத்தியது.

Newsletter

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...