கோவையில் "மக்கள் குறைதீர்க்கும் நாள்": பிரச்சினைகளுக்கு ஒரே நாளில் தீர்வு

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில், நேற்று (08.01.2022) அனைத்து உட்கோட்டத்திலும் "மக்கள் குறைதீர்க்கும் நாள்" நடத்தப்பட்டு பொது மக்களுடைய பிரச்சினைகளுக்கு ஒரே நாளில் தீர்வு காணப்பட்டது.


கோவை: கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில், நேற்று (08.01.2022) அனைத்து உட்கோட்டத்திலும் "மக்கள் குறைதீர்க்கும் நாள்" நடத்தப்பட்டு பொது மக்களுடைய பிரச்சினைகளுக்கு ஒரே நாளில் தீர்வு காணப்பட்டது.

பெரியநாயக்கன்பாளையம் உட்கோட்டத்தில்-47 மனுக்களுக்கும், பேரூர் உட்கோட்டத்தில்-56 மனுக்களுக்கும், கருமத்தம்பட்டி உட்கோட்டத்தில்-67 மனுக்களுக்கும், பொள்ளாச்சி உட்கோட்டத்தில்-15 மனுக்களுக்கும், வால்பாறை உட்கோட்டத்தில்-09 மனுக்களுக்கும், மேட்டுப்பாளையம் உட்கோட்டத்தில்-53 மனுக்களுக்கும், மற்றும் மாவட்ட குற்றப்பிரிவில்-11 மனுக்களுக்கும் மொத்தம் 258 மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டு மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இனிவரும் காலங்களில் ஒவ்வொரு மாதத்திலும் முதல் சனிக்கிழமை அன்று "மக்கள் குறைதீர்க்கும் நாள்" நடத்தப்பட்டு பொதுமக்கள் கொடுக்கும் மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களின் குறைகளைத் தீர்க்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் இம்முயற்சி பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

Newsletter

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...