முழு ஊரடங்கால் திருப்பூரில் சாலைகள் வெறிச்சோடின

ஞாயிறு ஊரடங்கு காரணமாகத் திருப்பூர் மாநகர் முழுவதும் வெறிச்சோடியது. தேவையின்றி வெளியே சுற்றுபவர்களை கண்காணித்து போலீசார் அபராதம் விதிக்கின்றனர்.


திருப்பூர் :ஞாயிறு ஊரடங்கு காரணமாகத் திருப்பூர் மாநகர் முழுவதும் வெறிச்சோடியது. தேவையின்றி வெளியே சுற்றுபவர்களை கண்காணித்து போலீசார் அபராதம் விதிக்கின்றனர்.

தமிழகத்தில் கொரானா நோய்த்தொற்று தொடர்ந்து அதிகரிப்பதால் அதனை கட்டுப்படுத்திட அரசுதமிழகத்தில் ஞாயிறு ஊரடங்கு பிறப்பித்துள்ளது. இன்று ஞாயிறு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில், திருப்பூர் மாவட்டத்தில்பேருந்துகள் ஆட்டோக்கள் இருசக்கர வாகனங்கள் செல்லாமல் சாலைகள்வெறிச்சோடி காணப்படுகிறது.

மேலும் பால் மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களைத் தவிர அனைத்து கடைகளும் மூடப்பட்டு நகர் முழுவதும் வெறிச்சோடி காணப்படுகிறது. தென்னம்பாளையம், பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், புஷ்பா ரவுண்டானா உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறையினர் முகாமிட்டு வாகன சோதனையிட்டுக் கண்காணித்து வருவதோடு வாகனங்கள் மூலமாக நகர் முழுவதும் சுற்றிக் கண்காணித்து வருகின்றனர்.

அத்தியாவசிய பணிகளான மருத்துவமனைகள், மருந்தகங்கள், பால், ஏடிஎம் மையங்கள், சரக்கு வாகன போக்குவரத்து, பெட்ரோல் பங்குகள், நாளிதழ்கள் விற்பனை போன்றவை இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

வீடுகளுக்கு நேரடியாக பார்சல் சப்ளை செய்வதற்கு ஒரு சில உணவகங்களில் பார்சல் சேவைகளுக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது. மருத்துவ தேவைகளைத் தவிர வாகனங்களில் வருபவர்களைக் கண்காணித்து போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர். முழு ஊரடங்கு என்பதால் திருப்பூர் மாநகர் முழுவதும் வெறிச்சோடி காணப்படுகிறது.

Newsletter

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...