வாளையாறு சோதனைச்சாவடிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு

அமலுக்கு வந்த ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு, வாளையாறு சோதனை சாவடியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கேரளாவிலிருந்து தமிழகத்திற்குள் கனரக வாகனங்கள் மட்டுமே வந்த வண்ணம் உள்ளன.


கோவை: அமலுக்கு வந்த ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு, வாளையாறு சோதனை சாவடியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒமிக்ரான் மற்றும் கொரோனா வைரஸ் தொற்று தற்போது தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. வார நாடுகளில் இரவு நேர ஊரடங்கும் இந்த ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளதால் கோவையில் முக்கிய சாலைகளான காந்திபுரம் கிராஸ்கட் சாலை, அவிநாசி சாலை, டவுன்ஹால் உக்கடம் ஆகிய பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

இந்நிலையில் தமிழக கேரள எல்லையான வாளையாறு சோதனை சாவடியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவிலிருந்து தமிழகத்திற்குள் கனரக வாகனங்கள் மட்டுமே வந்த வண்ணம் உள்ளன.



இதர வாகனங்களில் வருவோர் அவரச தேவைகளுக்கு வந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். அவர்களும் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழோ, கொரோனா நெகட்டிவ் சான்றிதழ்கள் இருந்தால் மட்டுமே கோவைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

மேலும் கோவை மாநகர் புறநகர்ப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் போலீசார் சோதனை சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...