கோவை செல்வபுரம் அருகே சர்ச் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை..!

ஆலயத்தின் பாதிரியார் பேட்ரிக் இருதயராஜ் அளித்த புகாரின் பேரில் செல்வபுரம் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவை செல்வபுரம் அருகே சர்ச் உண்டியலை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை செல்வபுரம் அடுத்த பேரூர் மெயின்ரோட்டில் அண்ணா அன்னை வேளாங்கண்ணி ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் பாதிரியாராக பேட்ரிக் இருதயராஜ் என்பவர் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சர்ச் ஆலயத்தை பூட்டிவிட்டு அவர் வீட்டிற்குச் சென்றார். மீண்டும் நேற்று காலை வந்து பார்த்த பொழுது ஆலயத்தின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது.

மேலும், உள்ளே இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு, அதிலிருந்த பணம் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, ஆலயத்தின் பாதிரியார் பேட்ரிக் இருதயராஜ் செல்வபுரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...