கோவையில் கொரோனா நோயாளிகளுக்கு வீட்டிலேயே சிகிச்சை அளிக்க 5 மருத்துவக் குழு நியமனம்..!

மாநகராட்சியில் உள்ள 5 மண்டலத்துக்கும் தலா ஒரு மருத்துவக் குழு நியமிக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவில் ஒரு டாக்டர், ஒரு நர்சு ஆகியோர் இருப்பர்.


கோவை: கோவையில் கொரோனா நோயாளிகளுக்கு வீட்டிலேயே சிகிச்சை அளிக்க 5 மருத்துவக் குழு நியமிக்கப்பட்டு உள்ளது.

கோவை மாநகராட்சி பகுதியில் தினசரி கொரோனா பாதிப்பு தற்போது 300-ஐ தாண்டிவிட்டது. இதனால் தொற்று பரவல் வேகத்தை கட்டுப்படுத்த மாவட்டம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, நேற்று முதல் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு வீட்டிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ரேஸ்கோர்ஸ் பகுதியில் கொரோனா உறுதி செய்யப்பட்ட நோயாளிகளுக்கு அவர்களின் வீடுகளிலேயே சிகிச்சை அளிக்கும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது மாநகராட்சி நகர்நல அலுவலர் சதீஷ்குமார், உதவி நகர் நல அலுவலர் வசந்த் திவாகர் ஆகியோர் உடனிருந்தனர்.

இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரி கூறியதாவது:-

கோவை மாநகராட்சி பகுதியில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை அவர்களின் வீடுகளிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க மருத்துவக் குழுக்கள் நியமிக்கப்பட்டு உள்ளது.

மாநகராட்சியில் உள்ள 5 மண்டலத்துக்கும் தலா ஒரு மருத்துவக் குழு நியமிக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவில் ஒரு டாக்டர், ஒரு நர்சு ஆகியோர் இருப்பர். கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதியானவர்களின் வீட்டிற்கு மருத்துவக் குழு நேரில் சென்று உடல்நிலையை ஆய்வு செய்வார்கள்.

இதில், இணை நோய், கூடுதல் பாதிப்பு உள்ளவர்களை மருத்துவமனைக்கு அனுப்புவார்கள். தொற்று வீரியம் குறைந்த நோயாளிகளுக்கு வீட்டிலேயே சிகிச்சை அளிப்பார்கள்.

இதன் மூலம் மருத்துவமனையில் படுக்கை வசதி கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்படாது. வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களை பாதுகாப்பு கவச உடையுடன் மருத்துவக் குழு சந்தித்து ஆலோசனை வழங்கும். அவர்கள், காய்ச்சல், ஆக்ஸிஜன் அளவை கண்டறிந்து தொடர் சிகிச்சை வழங்குவார்கள். தேவைப்பட்டால் மருத்து, மாத்திரை வழங்கப்படும்.

மேலும் ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் உள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் மூலமும் இந்த பணிகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...