இதுகுறித்து மணிகண்டனின் தந்தை கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே சிக்கலாம்பாளையத்தில் குடும்ப பிரச்சினை காரணமாக கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள சிக்கலாம்பாளையம் சக்திநகர் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் இவரது மகன் மணிகண்டன்(33) இவருக்கு ராணி(30) என்ற மனைவியும் யுகேஷ்(7), அபிஷேக்(3) என்ற 2 மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில், கட்டிட தொழிலாளியான மணிகண்டன் மற்றும் மனைவி ராணிக்கு அடிக்கடி குடும்ப பிரச்சனை ஏற்படுவதும் சண்டை போடுவதுமாக இருந்து வந்தாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று இரவு வழக்கம் போல் கணவன், மனைவி இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டதில் தனித்தனி அறையில் தூங்கச் சென்றதாக தெரிகிறது.
இதனிடையே, இன்று காலை கழிவறைக்குச் சென்ற ராணி, கழிவறைக்குள் கணவன் மணிகண்டன் தூக்கிட்ட நிலையில் தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து, கிணத்துக்கடவு காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்துறையினர் மணிகண்டனின் உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து மணிகண்டனின் தந்தை கண்ணன் கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.