பப்புவா நியூ கினியா நாட்டின் இந்தியாவிற்கான வர்த்தக ஆணையராக விஷ்ணு பிரபு நியமனம்..!

இந்திய பசிபிக் தீவுகள் நாடுகளின் வர்த்தக கவுன்சில் கூட்டம் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.


கோவை: தமிழக அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன் மற்றும் செஞ்சி மஸ்தான் முன்னிலையில் பப்புவா நியூ கினியா நாட்டின் இந்தியாவிற்கான வர்த்தக ஆணையராக டாக்டர் விஷ்ணு பிரபு அவர்களை பாப்புவா நியூ கினியா நாட்டின் தூதர் பவுலிஸ் கோர்னியா முன்னிலையில் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.



இந்திய பசிபிக் தீவுகள் நாடுகளின் வர்த்தக கவுன்சில் கூட்டம் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், வெளிநாடு வாழ் தமிழர் நலன் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் பப்புவா நியூ கினியாவுக்கான வர்த்தக ஆணையர் டாக்டர் விஷ்ணு பிரபு, இந்தியாவிற்கான பப்புவா நியூ கினியாவின் ஆணையர் பாலியாஸ் கோர்னி, வெளியுறவு அமைச்சக செயலாளர் டாக்டர் வெங்கடாசலம் முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியின்போது பேசிய அமைச்சர் மஸ்தான், வெளிநாடு வாழ் தமிழர்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க வருகை தர வேண்டும். இதற்கான முன்னெடுப்பில் தமிழக முதலமைச்சர் சிறப்பான முன்னெடுப்புகளை முன்னெடுத்து வருகிறார்.

தமிழகத்தில் தொழில் தொடங்க வரும் வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு தொழில் தொடங்குவதற்கான இடங்கள் வழங்கப்படும். தமிழகம் பொருளாதார ரீதியாக வளர்வதற்கு வெளிநாடு வாழ் தமிழர்களின் பங்கு அவசியம் என்றார்.

நிகழ்ச்சியில் பேசிய நிதியமைச்சர், தற்போதைய காலத்தில் உலகளாவிய வர்த்தக உறவு என்பது அவசியமானதாக உள்ளது. தற்போது இந்தியா மற்றும் பப்புவா நியூ கினியா இடையே வர்த்தக உறவு உருவாவது மகிழ்ச்சியளிக்கக் கூடியதாக உள்ளது. வர்த்தக உறவு வளர்வதற்கு தமிழக நிதி அமைச்சர் என்கிற முறையில் தன்னால் முடிந்த உதவிகளை செய்வேன் என கூறினார்.

பின்னர் செய்தியாளரிடம் பேசிய பப்புவா நியூ கினியா நாட்டிற்கான இந்திய வர்த்தக ஆணையர் டாக்டர் விஷ்ணு பிரபு, பப்புவா நியூ கினியா நாட்டிற்கு வர்த்தக ஆணையராக நியமனம் செய்த பப்புவா நியூ கினியா நாட்டின் தூதர் பாலியாஸ் கோர்னி அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் இந்தியா மற்றும் பப்புவா நியூகினியா நாட்டிற்கு இடையே வர்த்தக உறவு மேம்படுவதற்கு தன்னால் முடிந்த முன்னெடுப்புகளை மேற்கொள்வேன்.



பப்புவா நியூகினியா நாட்டில் ஏராளமான தங்கம் மற்றும் இயற்கை வளங்கள் உள்ளன. அவைகளை இந்தியாவில் வர்த்தகம் செய்வதற்கு முயற்சிகளை மேற்கொள்வேன். இந்தியாவின் பொருட்களையும் பப்புவா நியூகினியா நாட்டில் பிரபலப் படுத்த முயற்சி மேற்கொள்வேன் என்று தெரிவித்தார்.

Newsletter

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...