இதுகுறித்து புகாரின் பேரில் காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
கோவை: கோவையில் தனியார் மருத்துவ நிறுவன ஊழியரை கத்தியால் குத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையைச் சேர்ந்தவர் முருகேசன்(26). தனியார் மருத்துவ நிறுவன ஊழியரான இவர், நேற்று ராம்நகர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த 2 வாலிபர்கள் முருகேசனை வழிமறித்தனர். பின்னர் அவரை கத்தியால் குத்திவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர்.
இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.