கோவை சரவணம்பட்டி பகுதியில்‌ தார்‌ சாலை அமைக்கும்‌ பணிகளை நகராட்சி நிர்வாகம்‌ மற்றும்‌ குடிநீர்‌ வழங்கல்‌ துறை செயலாளர் ஆய்வு..!

இந்த ஆய்வில், நகராட்சி நிர்வாக இயக்குநா் பா.பொன்னையா இ.ஆ.ப., மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்‌.சமீரன்‌ இ.ஆ.ப., மற்றும்‌ மாநகராட்சி ஆணையர் ராஜ கோபால்‌ சுன்கரா இ.ஆ.ப., ஆகியோர்‌ முன்னிலை வகித்தனர்‌.


கோவை: கோவை மாநகராட்சி வடக்கு மண்டல சரவணம்பட்டி 31வது வார்டு பகுதியில்‌ ரூ.42 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ தார்‌ சாலை அமைக்கும்‌ பணி மற்றும்‌ மத்திய மண்டலம்‌ 53வது வார்டு பகுதியில்‌ ரூ.10.60 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ தார்‌ தளம்‌ புதுப்பிக்கும்‌ பணிகளை கூடுதல் தலைமைச்‌ செயலாளரும்‌ நகராட்சி நிர்வாகம்‌ மற்றும்‌ குடிநீர்‌ வழங்கல்‌ துறை செயலாளருமான சிவதாஸ்‌ மீனா இ.ஆ.ப., நேரில்‌ ஆய்வு செய்தார்.



இந்த ஆய்வில், நகராட்சி நிர்வாக இயக்குநா் பா.பொன்னையா இ.ஆ.ப., மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்‌.சமீரன்‌ இ.ஆ.ப., மற்றும்‌ மாநகராட்சி ஆணையர் ராஜ கோபால்‌ சுன்கரா இ.ஆ.ப., ஆகியோர்‌ முன்னிலை வகித்தனர்‌.



கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம்‌ சரவணம்பட்டி வார்டு எண்‌.31க்குட்பட்ட ஷாஜகான்‌ நகரில்‌ 480 மீட்டர் தொலைவிற்கு 5 மீட்டர் அகலத்தில்‌ தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள்‌ உட்கட்டமைப்பு திட்டத்தின்‌ கீழ்‌ ரூ.42 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ தார் சாலை அமைக்கும்‌ பணிகளை கூடுதல்‌ தலைமைச்‌ செயலாளரும்‌ நகராட்சி நிர்வாகம்‌ மற்றும்‌ குடிநீர் வழங்கல்‌ துறை செயலாளருமான திரு.சிவதாஸ்‌ மீனா இ.ஆ.ப., நேரில்‌ சென்று ஆய்வு செய்தார்.



பின்னா்‌, மத்திய மண்டலம்‌ 53வது வார்டு சித்தா நாயுடு பள்ளி சாலையில்‌ தார்‌ தளம்‌ புதுப்பிக்கும்‌ பணிகளை ஆய்வு செய்து, தார்‌ சாலை அமைக்கும்‌ பணிகளை விரைவாகவும்‌, தரமானதாகவும்‌ முடித்து பொதுமக்கள்‌ பயன்பாட்டிற்கு கொண்டுவர மாநகராட்சி பொறியாளா்களிடம்‌ அறிவுறுத்தினார்.



இந்த ஆய்வின்போது, நிர்வாக பொறியாளர்‌ ராமசாமி, மண்டல உதவி ஆணையாளர்கள்‌ மோகனசுந்தரி(வடக்கு), சங்கா(மத்தியம்‌), உதவி செயற்பொறியாளர்கள் செந்தில்பாஸ்கா்‌, சுந்தாராஜன்‌, வெங்கடாசலம்‌, ஏஞ்சலினா, மண்டல சுகாதார அலுவலா்கள்‌ இராதாகிருஷ்ணன்‌, சுகாதார ஆய்வாளர்‌ லோகநாதன்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ ஆகியோர்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...