கோவை கிணத்துக்கடவு அருகே கேரளாவுக்கு கடத்த முயன்ற ஒரு டன் ரேசன் அரிசி பறிமுதல்..!

21 மூட்டைகளில் இருந்த ஒரு டன் ரேஷன் அரிசி மற்றும் மினிடோர் ஆட்டோவை பறிமுதல் செய்த போலீசார் ரேஷன் அரிசி கடத்திய இருவரையும் கைது செய்தனர்.


கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே தாமரைக்குளம் பகுதி வழியாக கேரளாவுக்கு கடத்த முயன்ற ஒரு டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்த போலீசார், 2 பேரை கைது செய்தனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள தாமரைக்குளம் பகுதி வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக உணவுப் பொருள் கடத்தல் மற்றும் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்படி, இன்று அதிகாலை தாமரைக்குளம் பகுதியில் இருந்து நெ.10 முத்தூர் வழியாக செல்லும் சாலையில் ரகசியமாக கண்காணித்து வந்த போலீசார் அவ்வழியாக வந்த மினிடோர் ஆட்டோவை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில், அதில் ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, ஆட்டோவை ஓட்டி வந்த கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் எலிபாறை பகுதியைச் சேர்ந்த அபிலாஷ் (34), கொங்கம்பாறை பகுதியைச் சேர்ந்த சஜித் (27) ஆகியோரிடம் விசாரணை நடத்தியதில் தாமரைக்குளம், நல்லட்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ரேசன் கடையில் இலவசமாக வழங்கப்படும் ரேஷன் அரிசியை பொதுமக்களிடம் இருந்து வாங்கி கேரளாவுக்கு கடத்தியது தெரியவந்தது.



இதையடுத்து, 21 மூட்டைகளில் இருந்த ஒரு டன் ரேஷன் அரிசி மற்றும் மினிடோர் ஆட்டோவை பறிமுதல் செய்த போலீசார் ரேஷன் அரிசி கடத்திய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...