கோவை அருகே லாரி மோதியதில் மான்குட்டி காயம்..!

வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்து, நீண்ட நேரமாகியும் வராத நிலையில், மான் குட்டி எழுந்து மெதுவாக வனப்பகுதிக்குள் சென்றது.


கோவை: கோவை அருகே லாரி மோதி மான்குட்டி காயமடைந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ஈச்சனாரி தனியார் கல்லூரி அருகே நேற்று நள்ளிரவு மான் குட்டி ஒன்று சாலையை கடக்க முயன்றது. அப்போது, அந்த வழியாக வந்த லாரி மான்குட்டி மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட மான்குட்டி படுகாயம் அடைந்தது. அப்போது, ஈச்சனாரி 4 சந்திப்பு அருகே நின்று கொண்டிருந்த ஆம்புலன்ஸ் டிரைவர் கதிரேசன் மான் குட்டியை மீட்டு தண்ணீர் கொடுத்து முதலுதவி அளித்து, மதுக்கரை போலீசார் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

ஆனால் நீண்ட நேரமாகியும் அவர்கள் வரவில்லை. இதையடுத்து, மான் குட்டி எழுந்து மெதுவாக வனப்பகுதிக்குள் சென்றது.

Newsletter

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...