பொள்ளாச்சி அருகே குடும்பம் தகராறு காரணமாக மனைவி கண் முன்னே மண்ணெண்ணெயை ஊற்றி தீ குளித்த கணவன்..!!

உயிருக்கு ஆபத்தான நிலையில் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


கோவை: பொள்ளாச்சி அருகே குடும்பம் தகராறு காரணமாக மனைவி கண் முன்னே மண்ணெண்ணெயை ஊற்றி தீ குளித்த கணவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பொள்ளாச்சி அருகே உள்ள தொண்டாமுத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் செல்வராஜ். இவரது மனைவி சுனிதா. இவர்களுக்கு 13 வயதில் மகன் ஒருவர் உள்ளார்.

இதனிடையே, கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 7 ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், குடும்பம் நடத்த வருமாறு செல்வராஜ் அவ்வப்போது சுனிதாவிடம் கேட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு அவர் மறுத்துள்ளார்.

இந்நிலையில், இன்று காலை சுனிதா பணியாற்றும் சூளேஸ்வரன்பட்டி பகுதியில் உள்ள மிக்சர் தயாரிக்கும் கடைக்குச் சென்ற செல்வராஜ், மனைவியை வீட்டிற்கு அழைத்ததாக தெரிகிறது.

இதற்கு அவர் மறுக்கவே தான் கொண்டு வந்திருந்த கேனில் இருந்த மண்ணெண்ணையை மனைவி கண்முன்னே தனக்குத்தானே ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடலில் தீ பற்றி எரிந்த நிலையில் அலறியபடி ஆட்டோவில் ஏறி ஏறியுள்ளார். இதனால் ஆட்டோவும் தீப்பிடித்து எரிந்தது. பின்னர் அக்கம் பக்கம் உள்ள பொதுமக்கள் செல்வராஜை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



இதையடுத்து, அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு உயிருக்கு ஆபத்தான நிலையில் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள கிழக்கு காவல் நிலைய போலீசார் மனைவி சுனிதாவிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மனைவி கண் முன்னே கணவன் தீ குளித்து தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...