ஒருவரை பார்த்தால், நல்லா இருக்கீங்களா? என்று கேட்பதை விட தடுப்பூசி போட்டுவிட்டீர்களா? என்று தான் கேட்க வேண்டும். அப்போது தான் தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படும்.
கோவை: கோவை கொடிசியா வணிக வளாகத்தில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் சிகிச்சைக்காக அமைக்கபட்டுள்ள படுக்கை வசதிகளை மின்சாரத்துறை அமைச்சர், செந்தில் பாலாஜி இன்று ஆய்வு செய்தார்.

இதனைதொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அவர், "கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கபட வேண்டும் என தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தொற்றால் பாதிக்கபடுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க கோவை கொடிசியா வளாகத்தில் அனைத்து வசதிகளும் தயார் நிலையில் உள்ளது.

கோவை மாவட்டத்தில் 4,272 சாதாரண படுக்கைகள், 650 சிகிச்சைக்கான படுக்கைகள், அரசு மருத்துவமனையில் 1,136 படுக்கை ஆக்சிஜன் வசதியுடன் தயார் நிலையில் உள்ளன. 113 தீவிரசிகிச்சை படுக்கைகள், தனியார் மருத்துவமனைகளில் 4365 படுக்கைகள் என மொத்த 11525 படுக்கை வசதிகளை கொண்ட முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி சார்பில் செய்யபட்டுள்ளது.

இன்று ஆய்வு செய்த கொடிசியா மையத்தில் 650 படுக்கை வசதிகள் ஒரே நாளில் ஏற்பாடு செய்யபட்டுள்ளது. கோவையை பொருத்தவரை 1614 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் 408 பேர் தொற்றால் பாதிக்கபட்டுள்ளனர். கோவையில் ஒமிக்ரான் தொற்று ஒருவருக்கு இருந்த நிலையில், அவர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். மேலும், ஒமிக்ரான் அறிகுறிகள் உள்ள 15 மாதிரிகள் சோதனை செய்ய அனுப்பபட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் 900 சிகிச்சை பெற்று வருகின்றனர். பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். நாளை தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது, இதுவரை தடுப்பூசி செலுத்தாதவர்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
ஒருவரை பார்த்தால், நல்லா இருக்கீங்களா? என்று கேட்பதை விட தடுப்பூசி போட்டுவிட்டீர்களா? என்று தான் கேட்க வேண்டும் அப்போது தான் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கும் செலுத்தி கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படும்..கோவை மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசி 96% பேரும், இரண்டாம் தவணை 78% செலுத்திக் கொண்டுள்ளனர். கோவையில் தற்போது, 2 லட்சம் தடுப்பூசி கையிருப்பு உள்ளது.
இரவு நேர ஊரடங்கு கட்டுபாடு அமலில் உள்ள நிலையில், மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை வேண்டிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இருந்தபோதிலும், ஊரடங்கிற்கு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்i.பாதிப்புகள் குறைவு என்பதற்காக சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைபிடித்தால் மட்டுமே பாதிப்பை குறைக்க முடியும்", என்றார்.