கருமத்தம்பட்டியில் வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் கொள்ளை

கருமத்தம்பட்டி அருகே கணவருக்கு இறுதி காரியம் செய்ய சென்றபோது வீட்டின் கதவை உடைத்து 30-பவுன் நகை, 1- லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கருமத்தம்பட்டி அருகே கணவருக்கு இறுதி காரியம் செய்யச் சென்றபோது நோட்டமிட்ட திருடர்கள் வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகையைக் கொள்ளையடித்துச் சென்றனர்.

கருமத்தம்பட்டி கிருஷ்ணாபுரம் தட்டியங்காடு தெருவைச் சேர்ந்தவர் நாராயணன் (57). இவர் கடந்த மாதம் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். அவரது இறப்பு 30 நாள் காரியத்திற்காகச் சொந்த ஊரான பல்லடத்துக்கு கடந்த சனிக்கிழமை சியாமளா மற்றும் குடும்பத்தினர் சென்றனர்.

இன்று காலை அவர்கள் கருமத்தம்பட்டி திரும்பினர். அப்போது வீட்டின் கதவு திறந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது அங்குப் படுக்கை அறையிலிருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த 30-பவுன் தங்க நகை மற்றும் 1-லட்ச ரூபாய் மாயமாகி இருப்பது தெரியவந்தது.

சியாமளா குடும்பத்தினர் வெளியூர் செல்வதை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீடு புகுந்து கொள்ளை அடித்து இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து கருமத்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. பாண்டிய ராஜன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் அங்கு பதிவான ரேகைகளைக் கொண்டு இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் பழைய குற்றவாளிகள் அல்லது புதிய நபர்களை என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...