அன்னூரில் காயம்பட்ட மயிலை மீட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தவருக்கு காவல் ஆய்வாளர் பாராட்டு

காயம்பட்ட நிலையிலிருந்த மயிலை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர், காவல் நிலையத்தில் ஒப்படைத்தவரைப் பாராட்டி காவல் ஆய்வாளர் சன்மானம் வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


அன்னூர்: காயம்பட்ட நிலையிலிருந்த மயிலை மீட்டுக் காவல் நிலையத்தில் ஒப்படைத்தவரைப் பாராட்டி காவல் ஆய்வாளர் சன்மானம் வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் அன்னூரை அடுத்துள்ள எல்லப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இன்று காலை அவரது வீட்டிற்கு அருகே சாலையில் மயில் ஒன்று காயம் பட்ட நிலையில் இருப்பதைக் கண்டுள்ளார்.

உடனடியாக அருகில் சென்று பார்த்த பொழுது இறக்கைகளில் காயம் பட்டுப் பறக்க முடியாமல் இருந்ததை அறிந்தார்.



இதனையடுத்து காயம்பட்ட மயிலை மீட்ட ரமேஷ் மயிலுக்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் அன்னூர் காவல் ஆய்வாளர் நித்யாவிடம் ஒப்படைத்தார்.

அன்னூர் காவல்துறை இச்சம்பவம் குறித்து சிறுமுகை வனச்சரகர் செந்தில் குமாருக்குத் தகவல் அளித்துள்ளனர். விரைந்து வந்த வனத்துறையினர் காயம் பட்ட மயிலுக்கு சிகிச்சையளித்து வருகின்றனர்.

காயம்பட்ட நிலையிலிருந்த மயிலை மீட்டுக் காவல் துறையினரிடம் ஒப்படைத்த ரமேஷிற்கு பாராட்டிய காவல் ஆய்வாளர் நித்யா அவருக்குச் சன்மானமும் வழங்கினார். இச்சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...