திருப்பூரில் மரணத்தை ஏற்படுத்தும் வகையில் சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதைச் சுட்டிக்காட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மலர் வளையத்துடன் இறுதி ஊர்வலம் நடத்தி அஞ்சலி செலுத்தினர்.
திருப்பூர்: திருப்பூரில் மரணத்தை ஏற்படுத்தும் வகையில் சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதைச் சுட்டிக்காட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மலர் வளையத்துடன் இறுதி ஊர்வலம் நடத்தி அஞ்சலி செலுத்தினர்.
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வேலம் பாளையம் முதல் அணைப்பாளையும் வரையிலான சாலை மிகவும் மோசமடைந்து குண்டும் குழியுமாக இருப்பதால் அப்பாதையில் அடிக்கடி சாலை விபத்து ஏற்படுவதோடு அப்பகுதியில் போக்குவரத்து பிரச்சனைக்கு பெரும் இடையூறாக இருப்பதாகவும் உடனடியாக இந்த சாலையைச் சீரமைக்க வலியுறுத்தி பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என சுட்டிக்காட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மலர் வளையத்துடன் இறுதி ஊர்வலம் நடத்தி குண்டும் குழியுமான சாலையில் மலர் வளையம் வைத்து மலர் தூவி ஒப்பாரி வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.