ஆனைமலையில் கூட்டு பாலியல் வன்கொடுமை புகார் எதிரொலி: சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை

கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக வந்த புகாரையடுத்து 12-வயது பழங்குடியின சிறுமிக்கு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடந்தது.


கோவை: கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக வந்த புகாரையடுத்து 12-வயது பழங்குடியின சிறுமிக்குப் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடந்தது.

கோவை மாவட்டம் ஆனைமலை காவல்துறை நிலையத்தில் தன்னார்வலர் தன்ராஜ் என்பவர் புகார் ஒன்றைக் கொடுத்தார். அந்த புகாரில், டாப்சிலிப் அருகே கடந்த 1-ந் தேதி 12-வயது சிறுமியை ஒரு கும்பல் கடத்தி சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாகத் தெரிகிறது.

இதில் ஈடுபட்ட மர்மநபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தார். புகாரின் பேரில் காவல்துறை போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து அந்த சிறுமி வசிக்கக்கூடிய பகுதிக்கு காவல்துறை நேரில் சென்று, சிறுமியின் பெற்றோர் மற்றும் சிறுமியிடம் விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து, காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டதாக வந்த புகாரின் பேரில் விசாரணை நடத்தினோம். முதற்கட்ட விசாரணையில், அந்த சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடக்கவில்லை எனத் தெரிகிறது.

இருப்பினும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். விரைவில் புலன் விசாரணையை முடித்து, குறித்த காலத்திற்குள் இறுதி அறிக்கை செய்யச் சம்பந்தப்பட்ட காவல்துறை ஆய்வாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனர்.

இதற்கிடையே பழங்குடியின சிறுமியை காவல்துறை மருத்துவ பரிசோதனைக்காகப் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு மாணவிக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது.

இந்த அறிக்கை இன்று வர உள்ளது. மருத்துவ அறிக்கையின் முடிவிலேயே சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடந்து உள்ளதா? என்பது குறித்த முழு விவரம் தெரியவரும்.

Newsletter

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...