3-வது அலை: கோவையில் உட்கட்டமைப்பு தயாராக இருக்கிறது- ஆட்சியர் சமீரன்

கொரோனா 3-வது அலையைச் சமாளிக்கக் கோவையில் உட்கட்டமைப்பு தயாராக இருக்கின்றது என கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.



கோவை: கொரோனா 3-வது அலையைச் சமாளிக்கக் கோவையில் உட்கட்டமைப்பு தயாராக இருக்கின்றது என கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.



தமிழக கேரள எல்லையான கோவை வாளையாறு சோதனைச் சாவடியில் மாவட்ட ஆட்சியர் சமீரன் இன்று ஆய்வு மேற்கொண்டார்.



கேரளாவிலிருந்து தமிழகத்திற்குள் கோவை வழியாக அனுமதிக்கபடுவர்களின் ஆவணங்களைச் சரிபார்க்கும் பணிகளை ஆய்வு செய்தார்.



பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் பேட்டியளித்த அவர், கேரளாவிலிருந்து தமிழக எல்லை வழியாக வரும் 99 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டு உள்ளனர். தடுப்பூசி போடாமல், கொரோனா சோதனை செய்யாமல் வரும் பயணிகளைத் திருப்பி அனுப்பி விடுகின்றனர்.

உடல் வெப்ப பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்ட பின்னரே அனுமதி வழங்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை தினங்களில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கின் போதும் எல்லைப் பகுதிகளில் தீவிரமாகக் கண்காணிப்பு இருக்கும்.

ஊரடங்கு நேரத்தில் பொழுது போக்கு, சுற்றுலாவிற்காகச் செல்வதை பொது மக்கள் தவிர்க்க வேண்டும் எனவும், நாளை மெகா தடுப்பூசி முகாம் 1000-மேற்பட்ட இடங்களில் நடைபெறுகின்றது. இதில் 2-லட்சத்துக்கும் மேற்பட்ட மருந்து கைவசம் இருக்கின்றது எனவும் தெரிவித்தார்.

15 - 18 வயதினருக்குத் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெறுகின்றது. கோவை மாவட்டத்தில் முதல் தவணை 96 சதவீதம் பேரும், இரண்டாவது தவணை 78 சதவீதம் பேரும் போட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை இறைச்சி, மீன் கடைகள் இயங்காது எனவும், தடையை மீறி விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா 3 வது அலையைச் சமாளிக்கக் கோவையில் உட்கட்டமைப்பு தயாராக இருக்கின்றது எனவும், தேவையான படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Newsletter

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...